அனாவசிய கட்டுப்பாடுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்(பகுதி1) – சி.சிவன்சுதன்

பகுதி – 1

நாம் தினமும் எத்தனையோ அனாவசியமான கட்டுப்பாடுகளால் கட்டுண்டு வாழ்வை வீணடித்துக் கொண்டு கடமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோபப்படாதே, கவலைப் படாதே, சத்த மிட்டுச் சிரிக்காதே, அதிகம் சிரிக்காதே, கனவு காணாதே, இனிப்பு சாப்பிடாதே, ஸ்ரைல் பண்ணாதே, முட்டை சாப்பிடாதே, TV பார்க்காதே, பால் குடிக்காதே, சும்மா இருக்காதே, அரட்டை அடிக்காதே, பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காதே, கைத்தொலைபேசி பாவிக்காதே, உப்பு சாப்பிடாதே, புளி சாப்பிடாதே, உறைப்பு சாப் பிடாதே …… இவ்வாறாக கட்டுப்பாடுகள் கட்டுக் கடங்காமல் நீண்டு கொண்டே சென்றால் “அப்போ எப்படி வாழ்வது?” என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒன்றுமே இல்லாத இயந்திர வாழ் வின் அர்த்தம் என்ன என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

அனாவசிய கட்டுப்பாடுகள் மனிதனின் உடல் உள சமூக ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

மகிழ்வான வேளைகளில் சந்தோசப்படுவதும் சிரிப்பதும் கவலையான நேரங்களில் கவலை கொள்வதும் அழுவதும் மனதிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த அடிப்படை மன உணர்வுகளை கூட வெளிக்காட்ட கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது ஆரோக்கியமாகாது. கவலை கொண்டுள்ள ஒருவரை அழவேண்டாம் என்று தடுப்பதை விடுத்து அவருக்கு ஆதரவாக உதவியாக அரவணைத்துச் செயற்படுவது பயனுடையதாக அமையும்.

எமது மகிழ்வை வெளிப்படுத்தும் பொழுது அது இன்னொருவரை ஏழனப் படுத்துவாதாகவோ துன்பப்படுத்துவாதாகவோ அமைந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியமானதாகும்.

எம் மீது நாமே போட்டு வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் என்ற கட்டுக்களை நாம் எவ்வாறு தளர்த்துவது என்பது சம்பந்தமாக சிந்திப்பது பயனுடையதாக அமையும்.

தொடரும்…

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனா வைத்தியசாலை