தைரொக்சின் (Thyroxine) மருந்து பாவிப்பவர்களுக்குரிய அறிவுறுத்தல்கள்-Dr.க.சிவசுகந்தன்

Levothyroxine ஆனது தைரொட் ஹோர்மோன் Thyroid hormone ஆகும். இது தைரோய்ட் சுரப்பியின் வினைத்திறன் குறை வாக உள்ள நோயாளிகளுக்கு பாவிக்கப் படும்.

உடலில் தைரோய்ட் சுரப்பியானது தைரோய்ட் ஹோர்மோனை சுரக்கிறது. இவ் ஹோர்மோன் உட லின் சீரான இயக்கத்துக்கு அவசியமானது. இச் சுரப்பியின் தொழிற்பாடு குறையும் போது உடலில் தைரொக்சின் இன் அளவு குறைகிறது. இதனால் உடலில் சோம்பல்தன்மை, பசியின்மை, வேலையில் நாட்டமின்மை, அதிகதூக்கம் , உடல்நிறை அதிகரித்தல் போன்றன ஏற்படுகின்றன.

Levothyroxine இயற்கையாக உடலில் உற்பத்தி செய்யப்படும் தைரோய்ட் ஹோர்மோனை ஒத்தது. இவ் வில்லையை பாவிப்பதன் மூலம் உடலில் தைரொக்சின் இன் அளவை கூட்டலாம். இதன் மூலம் உடலின் இயக்கத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுசெல்லலாம்.

 

 

நான் எவ்வாறு இந்த மருந்தை பாவிப்பது?

  • இம்மருந்தானது உடலின் இயக்கத்தை அதிகரிப்பதால் இதை காலையில் போடுவதே சிறந்தது.
  • இம் மருந்தானது வெறுமையான குடலிலேயே விரைவாக அகதுறிஞ்சப்படுவதால் காலை யில் சாப்பிடவோ/தேநீர்குடிக்கவோ 30 நிமிடங் களுக்கு முன்பாவிக்கப்பட வேண்டும்.
  • இம் மருந்தை தவறாது தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும். வைத்தியர் அறிவுறுத்தினால் மட்டுமே நிறுத்த வேண்டும். இல்லாவிடில் உட லில் தைரொக்சின் இன் அளவு சீராகபேனப்படாது.
  • வைத்தியர் உங்கள் தேவைக்கேற்றவாறு மருந்தின் அளவை மாற்றுவார்.

நான் இம்மருந்தை போட தவறினால் என்ன செய்வது?

மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்களில் ஞாபகம் வருமாயின் அதை போடுங்கள். இரு வில்லைகளை சேர்த்தோ அல்லது இரவிலோ போடவேண்டாம்.

நான் எவ்வாறு சரியான அளவில் மருந்தை பாவிக்கிறேன் என்பதை அறிவது?

இதற்காக TSH எனும் பரிசோதனையை செய்ய வேண்டும். இவ் ஹோர்மோனானது தைரோய்ட் சுரப்பியை துண்டி தைரொக்சினை சுரக்க வைக்கிறது.

இதனால் உடலில் தைரொக்சின் இன் அளவு குறைந்தால் இதன் அளவு கூடும். உடலில் தைரொக் சின் அதிகமாக இருப்பின் இவ்ஹோர்மோன் இன் அளவு குறையும் உடலில்உள்ளTSH இன்அளவைகொண்டு உங்கள் மருந்தின் அளவை வைத்தியர் மாற்றுவார்.

இம் மருந்தை பாவிப்பதால் ஏதும் பக்கவிளை வுகள் ஏற்படுமா?

  • இம் மருந்தை சரியான அளவில் பாவித்தல் ஏந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.
  • இம் மருந்தின்அளவு உடலில் கூடிவிட்டால் நித்திரையின்மை, வயிற்றோட்டம், நெஞ்சுபதற்றம், அதிகம்.வியர்த்தல், உடல்நிறை குறைதல் போன்றன ஏற்படும்.
  • இம்மருந்து உடலில்போதாவிட்டால் தைரொக்சின் குறைந்த போது இருந்த அறிகுறிகள் தொடர்ச் சியாக இருக்கும்.

இம் மருந்தை எவ்வளவு காலம் பாவிக்க வேண்டும்?

இது நோய்களுக்கேற்ப மாறுபடும். உங்கள் வைத்தியர் இதை தெளிவுபடுத்துவார்.

இம் மருந்தை தேவைப்படின் மருந்துக்கடை களில் வாங்கி பாவிக்கலாமா?
இம் மருந்தை பாவிக்கும் போது ஒரேவிதமான கம்பனி மருந்தை பாவிப்பது சிறந்தது. வைத்திய சாலையில் வாங்குபவராயின் தொடர்ந்தும் வைத் திய சாலையில் வாங்குவதே சிறந்தது.

Dr.க.சிவசுகந்தன்
யாழ்.போதனாவைத்தியசாலை