அனாவசிய கட்டுப்பாடுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்(பகுதி 2) – சி.சிவன்சுதன்

வாழ்க்கையில் விதிக்கப்படும் அனாவசியமான கட்டுப்பாடுகள் மனிதனின் உடல் உள சமூக நன்னிலை ஆகிய உண்மையான சுகாதார நிலையை பாதிக்கும் என ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

சுவையாக உண்பதும் வாழக்கையின் ஒரு முக்கிய அம்சம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சுவையான உணவு வகைகளை யாரும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு போன்ற அனைத்து சுவைகளும் ஆபத்தானவை என எண்ணிக் கொள்கிறோம். ஜஸ்கிறீம், பாயாசம் போன்றவற்றை உணணும் பொழுது குற்ற உணவுர்க்கு ஆளாகின்றோம்.

உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உப்பின் அளவு உடலில் குறைந்து விட்டால் அது பல தீயவிளைவுகளுக்கு வழிவகுக்கும். வெப்ப வலய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு உப்பு தேவைப்படுகிறது. காரணம் வியர்வையின் மூலம் பெருமளவு உப்பு இழக்கப்படுதலாகும். எனவே உயர் குருதிய முக்கம் உள்ளவர்கள் கூட 6-10 கிராம் வரை யிலான உப்பை தினந்தோறும் உள்ளெடுப்பது நல்லது. உப்பின் முக்கியத்துவம் அறிந்தே எம் முன்னோர் “உப்பில்லா பண்டம் குப்பையிலே” “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது போன்ற பல உப்பை பற்றிய விடயங்களை கூறி வைத்திருக்கிறார்கள்.

எனவே போதியளவு உப்பு சேர்த்து கறிசமைக்க பயப்பட வேண்டிய அவசிய மில்லை. ஆனால் அளவுக்கு அதிகமான உப்பை உணவிலே சேர்த்துக் கொள்வதை தவிப்பது நல்லது. இதே போன்று உணவிலே உறைப்பு, புளிப்பு சுவைகளை சேர்ப்பதனால் தீய விளைவுகள் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவை உணவின் சுவையை மெருகேற்றும் என்பதுடன் சமிபாட்டிற்கும் உறுதுணையாகயிருக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற விடயத்தை மறந்துவிடலாகாது.

பால், முட்டை போன்றவற்றை போதியளவு உணவிலே சேர்த்துக் கொள்ள முடியும். இவை இயற்கையான பாதுகாப்பான நிறை உணவு களாகும். வெங்காயம், உள்ளி, இயற்கையான வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்கள் கூட போதியளவு உண்ண முடியும்.

சுகதேகிகளும்நோய்க்குஆட்பட்வர்களும்உணவை சுவையானதாக சமைத்து உண்ணும் பொழுது அவர்களின் உடல் உள ஆரோக்கியம் மேம்படும்.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனாவைத்தியசாலை.