புற்றுநோய்

புற்று நோய் என்றால் என்ன?
இது உடற்கலங்களி, உடலின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் தன்னிச்சிசையாக அசாதாரண முறையில் பெருக்க மடைவதால் ஏற்படும் வளர்ச்சிகள் (கட்டிகள்) எனக் கொள்ளலாம். இது உடலின் எப் பகுதியிலும் ஏற்படலாம்.

புற்று நோய்க்குரிய எச்சரிக்கை அறிகுறிகள் யாவை? .

 • நீண்ட காலம் நிலைத்திருக்கும் இருமல் குரல் வித்தியாசம்.
 • குணமடையாத புண்.
 • உடம்பில் கட்டு தழும்பு அல்லது உண்ணி ஏற்படுதல் அல்லது பல காலமாக இருந்து திடீரென வளர்ச் சியடைதல்.
 • மார்பகங்களில் அல்லது வேறு இடங்களில் ஏற்படும் கட்டிகள் அல்லது தடிப்புகள்.
 • பெண் யோனி வழியில் இருந்து அசாதாரணமான இரத்தம் அல்லது வெள்ப்ளை போக்கு ஏற்படுதல் அல்லது மாதவிடாய் நின்ற பின்பும் இரத்த போக்கு ஏற்படுதல்.
 • மல சலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் வித்தியா சம் அல்லது மலத்தோடு ரத்தம் வெளிவரல்.
 • அதிக காலமாக நீடித்திருக்கும் அஜீரணம்(சமிபாட் டின்மை) அல்லது விழுங்குவதில் உள்ள கஸ்டம்.

புற்று நோய்க்கான காரணிகள் யாவை?

புற்று நோய்க்கான சரியான காரணிகள் எவையென இன்னமும் கூற முடியாதுள்ளது. எனினும் புற்று நோயானது வாழ்க்கை முறை பரம்பரை மற்றும் சுற்றாடல் காரணிகளின் கூட்டுத் தாக்கத்தின் விளைவாகவே ஏற்படுகின்றது எனக் கருதப்படுகின்றது.

புற்று நோயை ஏற்படுத்துவதற்கான பாதகமான காரணிகள் யாவை?

 1. புகையிலையை பாவித்தல் :- இதனைப் புகைப் பதினாலோ, அப்புகையை அருகிலிருந்து உள்வாங்குவத னாலோ அல்லது இதனை பாக்கு, சுண்ணாம்புடன் உட் கொள்வதனாலோ ஏற்படும்.
 2. மதுபானம் அருந்துல் :- இதன் எரிவுத்தாக்கத்தால் வாய் களப்புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதுடன் இதனால் ஈரல் பாதிப்படைந்து ஈற்றில் ஈரற் புற்று நோய் ஏற்படும்.
 3. மாறுபட்ட உணவுப்பழக்க வழக்கம் :- உறைப் பான சூடான கொழுப்பகதிகமான மற்றும் நார்த்தன்மை குறைந்த உணவுகள் புற்றுநோயை அதிகம் ஏற்படுததும்.
 4. வாய்ச் சுகாதாரம் இன்மை :- வாய் புற்று நோய் ஏற்பட வழி வகுக்கும்.
 5. இரசாயன பதார்த்தங்கள்:- அதிக காலம் இவற்றை கையாண்டு வேலை செய்வோர்க்கு குறிப்பாக இரத்த புற்று நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்று நோய் என்பன ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
 6.  ஓமோன் குளிசைகளைப் பாவித்தல் – பெண்கள் மாதவிடாய் நின்ற பின்பு ஓமோன்களைப் பாவிப்பதால் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 7. சூரியனிலிருந்துவரும்ரு கதிர்கள் மற்றும் ஓசோன் படலத்தின் உடைவால் பூமியை அடையும் பாதகமான சூரியக் கதிர்கள் தோல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்.
 8. அணுக்கதிர் தாக்கம்.
 9. பரம்பரை அலகுகளின் இயல்பு :- புற்று நோயாளரின் நெருங்கிய உறவினராயிருத்தல் ஒரு சில புற்று நோய்கள் உதாரணமாக மார்பகபுற்று நோய, குடற் புற்று நோய் மற்றும் ரத்த புற்றுநோய் என்பன பரம்பரை ரீதியாக கடத்தப்படுகின்றன.
 10. நல்ல உடற்பயிற்சி இன்மை :- உடற் பருமன் அதிகரிப்பதனால் குறிப்பாக மார்பகப் புற்று நோய் மற்றும் குடற் புற்று நோய் அதிகரிக்கலாம்.

வாய்ப் புற்று நோய்

வயது முதிந்தோரை அதிகம் பாதிக்கின்றது. புற்று நோய் முன்னிலைகளான உயர்ந்து தென்படும் அகற்ற முடியாதவெண்ணிற அல்லது செந்நிறதழும்புகளை கண்ணாடி யில் பார்த்து இனங்காண முடியும். இவ்வாறு இனங்காணப் படுமிடத்து வைத்தியரை நாடி குணமாக்கும் வகையிலான பூரண சிகிச்சை பெறக் கூடியதாவிருக்கும். அவ்வாறின்றி பிந்திய நிலையில் புற்றுநோய் இனம் காணப்படுமாயின் சிகிச்சை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகள்

 1.  வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போன்றவற்றை மெல்லுதல்.
 2. பீடி. சிகரட் சுருட்டு புகைத்தல்.
 3. ஒழுங்கற்ற வாய்ச்சுகாதாரம். .
 4. மதுபானம் அருந்துதல்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் மீண்டும் ஏற்படும் உறுத்தலினால் வாயில் உண்டாகும் புண்.

 1. கூரான உடைந்த பற்கள்
 2. சரியான அளவில் செய்யப்படாத செயற்கை பற்கள்.
 3. அதிகளவான மிளகாய், மிளகாய்த்துாள்பாவித்தல்
 4. பீடை கொல்லி போன்ற ரசாயன பதார்த்தங் களினை அதிகளவில் பாவித்தல்.
 5. சூரிய ஒளியின்ரள கதிர்களின்தாக்கம்-குறிப்பாக கீழ் உதடுகளில் புற்று நோய் ஏற்படும்.
 6. போசாக்கு குறைபாடு.

வாய்ப் புற்று நோயின் அறிகுறிகள்.

 • ஆறாத வாய்ப்புண்கள் .
 • வாயினுள் தடித்துக் காணப்படும் வெள்ளை, சிவப்பு நிறமான தழும்புகள்.
 • வாய் குழியின் கவசத்தோல் கழன்று போதல்.
 • உதடுகளிலோ, வாயினுள்ளோ வளரும் தசைத் துண்டுகள்.
 • வழமைக்கு மாறான ரத்தக் கசிவு.
 • மெல்லுதலிலும், விழுங்குவதிலும் ஏற்படும் சிரமம் அல்லது வலி. தெளிவான காரணங்கள் அற்ற நிலையில் பற் களின் உறுதி தளருதல்.
 • தாடையை அசைப்பதில் சிரமம்.
 • வாய்க்குழி உணர்வற்று போதல்
 • கழுத்துப்பகுதியல் நிணநீள்முடிச்சுக்கள் வீங்குதல்.

நீங்களே உங்கள் வாயைப் பரிசோதிக்கலாம். .

 • உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
 • முகம் பார்க்கும்கண்ணாடி முன்பாக நில்லுங்கள்.
 • உங்கள் முகத்தில் ஏதேனும் வீக்கங்கள, கட்டிகள், புண்கள் உள்ளதா என விரல்களின் நுனியினால் சோதித் துப்பாருங்கள்.முகம்சமச்சீராகஉள்ளதாஎனக்கவனியுங்கள்.
 • உங்கள் மேல, கீழ் உதடுகளை நன்கு இழுத்து அவற்றில் சிவப்பு, வெள்ளை புள்ளிகள் வீக்கங்கள் அல்லது கட்டிகள் உள்ளனவா என்பதை கை விரல்களின் உதவியு டனும் பரிசோதித்து பாருங்கள்.
 • உங்கள்முரசுகளில் ஏதேனும்நிறமாற்றங்கள் வீக் கங்கள, கட்டிகள், புண்களி, ரத்தக் கசிவு என்பன உள்ள னவா என பார்த்தும் தொட்டும் உணருங்கள்.
 • உங்கள் கடைவாயை வெளிப்பக்கத்துக்கு கையினால் நன்கு இழுத்து வாய்க் குழியின் உட்பக்கச் சுவரில் ஏதேனும் வீக்கங்கள, புணர்கள் அல்லது நிறமாற்றங்கள் உள்ளனவா என பரிசோதியுங்கள்.
 • நாக்கை நன்கு வெளியே நீட்டியும் பக்கப் புறங்களுக்கு இழுத்தும் அதில் மேற்கூறப்பட்ட மாற்றங்கள் ஏதாவது உள்ளனவாவென நன்கு பரிசோதியுங்கள்.
 • வாயை நன்றாக திறந்து அண்ணத்தை தொண்டை முளையை (Tonsil) உண்ணாக்கு ஆகியவற்றை பார்த்து மேற்கூறப்பட்ட மாற்றங்கள் உண்டாவெனப் பார்த்தும் தொட்டும் உணருங்கள்.
 •  நாக்கை உயர்த்தி தொண்டைக்குழியில் அடிப் பகுதியில் மேற்கூறப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என பரிசோதிக்கவும்.

 

மேற்படி பரிசோதனையை மாதத்திற்கு ஒரு தடவையேனும் செய்து ஏதேனும் சந்தேத்திற்கு இடமான மாற்றங்கள் காணப்பட்டால் வைத்தியரை நாடி ஆலோ சனை பெறவும்.

தகுந்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை கைக் கொள்வதன் மூலமும், வாய்க் குழியை சுயமாக பரிசோதித்து புற்று நோய் முன்நிலைகளை முன் கூட்டியே அறிந்து கொள்வதன் மூலமும், சரியான பற்சிகிச்சை பெறுவதன் மூலமும் வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாவதிலிருந்து அல்லது அதன்தாக்கத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

A.Q.H.M.Ashiqlie
மருத்துவ பீட மாணவன்,
யாழ்.பல்கலைக்கழகம்.