வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?- A.Q.H.M.Ashiqlie

  1. முதலில் மாரடைப்புதானா என்பதை உறுதி செய்ய பின்வரும் அறிகுறிகள் இருக் கின்றனவா என்பதை கவனிக்க.
    •  திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியானது இடதுபக்க தாடைக்கோ அல்லது இடதுபக்க தோற்பட்டைக்கோ பரவுவதைப் போன்று உணரல்
    •  வியர்த்தல் / மயக்கம் /வாந்தியெடுத்தல்
  2. உடனே அண்மையிலுள்ள வைத்திய சாலைக்கோ / நண்பருக்கோ / அயல் வீட்டா ருக்கோ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வைத்திய சாலைக்கு செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும். நீங்கள் தனி யாக வண்டியில் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம்.
  3. உங்கள் வீட்டில் Aspirin மாத்திரை இருந்தால் அதை கடித்து சாப்பிடவும். அது உங்கள் குருதிக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி குருதியோட்டத்தை அதிகரிக்கும். (Gtn (Glyceryl Trinitrate Tablet) மாத்திரை இருந்தால் நாக்கின் அடியில் வைக்கலாம்)
  4. உங்களுக்கு தலைச்சுற்று ஏற்படுமாயின் அது குருதியமுக்கத்தின் குறைவு காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் கீழேபடுத்து கொள்வதன் மூலம் மூளைக்குசெல்லும் குருதியின் அளவை அதிகரிக்கலாம்.
  5.  உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படு மாயின் ஒருகதிரையில் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் சீரான சுவாசித்தலை பேணலாம். நடக்க முயற்சிக்கவேண்டாம்.
  6. உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டு நீங்கள் உணர்வை இழப்பது போன்று தோன்றினால் தீவிரமாக இருமுவதன் மூலம் மயக்கத்தை தவிர்க்கலாம்.

A.Q.H.M.Ashiqlie
மருத்துவபீட மாணவன்
யாழ். பல்கலைக்கழகம்