இலங்கையில் நாய்க்கடிக்கான ஊசிபோடும் முறை-Dr.க.சிவசுகந்தன்

நீர்வெறுப்புநோய் / Rabies ஆனது வைரஸ் கிருமி யால் பரவும் நோயாகும். இவ் வைரஸ் கிருமியானது சில காட்டுமிருகங்களின் உமிழ்நீரிலோ அல்லது வீட்டு மிருகங்களின் உமிழ்நீரிலோ காணப்படலாம். இவை கடிக்கும் போது அல்லது பாதுகாப்பற்ற தோலில் நக்கும் போது மனிதரை வந்தடைகின்றன.

இம்மிருகங்கள் கழுத்தபின் இந்நோய் வராமலி ருக்க என்னசெய்யவேண்டும்?

 • கடித்த காயத்திற்கு சரியான முதலுதவி அளிக்க வேண்டும்.
 • ARS வழங்கவேண்டும்.
 • ARV வழங்கவேண்டும்.
 • கடித்தவிலங்கை 10 நாட்களுக்கு அவதானிக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் அது இறக்குமாயின் இவ் வைரஸ் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம்.

ARS என்பது என்ன?
இது Anti Rabies Serum ஆகும். இந்த வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்தாகும். இது மிருகத்தால் கடிபட்ட காயத்திலும் மிகுதி தொடையிலும் இடப்படும்.

ARV என்பது என்ன?

இது Anti Rabies Venum ஆகும்   மருந்தில் வைரஸ் கிருமியின் ஒருபாகமோ அல்லது செய லிழக்கப்பட்ட வைரஸ் கிருமியோ காணப்படலாம். இது எமது உடலில் இவ்வைரஸ் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது OPD (வெளி நோயாளர் பிரிவில்) இல் வழங்கப்படும்.
நான் எவ்வாறு காயத்திற்கு முதலுதவி அளிக்க வேண்டும்?

இவ்வைரஸ் கிருமியானது கடித்த காயத்தினுடாகவே உடலுக்குள் நுழைவதால் காயத்தை சுத்தப்படுத்துவது மிகமுக்கியமாகும்.

 • ஒடும் தண்ணில் 10 நிமிடங்களுக்கு காயத்தை பிடித்தல்.
 • சவர்க்காரநீரினால் கழுவுதல்.
 • மேற்படி கழுவிய பின் தொற்றுநீக்கியால் துடைத்தல்.

நான் காயத்திற்கு முதலுதவி அளிக்கும் போது செய்யக் கூடாதவை என்ன?

 • கழுவும் போது வெறும் கையால் புண்ணைத் தொடலாகாது.
 • எண்ணெய், மண், வெற்றிலைபோன்றவற்றை போடுவதை தவிர்க்கவேண்டும்.
 • ஒருபோதும் தையல் போடக்கூடாது.

யார்யார்க்கு மேற்படி மருந்துகள் ஏற்றவேண்டிவரும்?

மிருக கடியானது மூன்று வகையாக பிரிக்கப்படும்.

வகை 1
மிருகங்களைத் தொடல், காயங்கள் அற்ற தோலில் மிருகம் நக்குதல். இதற்கு எந்தவித சிகிச்சையும் தேவையில்லை.

வகை 2

இரத்த பெருக்கற்ற சிறு விறாண்டல் இதற்கு ARS தேவையில்லை, ARV போட வேண்டும்.

வகை 3

ஆழமான விறாண்டல்கள்,இரத்தப் பெருக்குடனான விறாண்டல்கள் காயமற்ற தோலில் அல்லது மென் சவ்வுகளில் உமிழ்நீர்படுதல். இதற்கு ARS உம் , ARV யும் போடவேண்டும்.

ARS எப்படி போடப்படும்?
குதிரையிலிருந்து பெறப்பட்ட மருந்தாயின் சோதனை ஊசிபோடவேண்டும்.

 • 0.1ml. மருந்து எடுக்கப்பட்டு அது பத்தின் ஒரு பங்காக ஐதாக்கப்படும். 3-4 mm அகலமான வளை யமாக உருவாகுமாறு தோலின் கீழ் ஏற்படும்.
 • மறுகையில் இதேபோன்று சேலைன் ஏற்றப்படும். இரண்டு கைகளையும் ஒப்பிட்டுப்பார்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படும்.
 • 15 நிமிடங்களின் பின் இது மீண்டும் சோதிக்கப்படும். வளையம் 10 mm இலும் பெரிதாகின் உங் களுக்கு மருந்து ஏற்றப்படமாட்டாது.
 • உங்கள் நிறைக்கு ஏற்றவாறுமருந்தின் அளவு எடுக்கப்பட்டு மருந்தின் ஒரு பகுதி காயத்தினுள்ளும் மிகுதி தொடையிலும் ஏற்றப்படும்.
 • இம் மருந்து ஏற்றியபின் சிலருக்கு அழற்சி ஏற்படலாம். அதாவதுமேல் கடித்தல், தலைசுற்றுதல், மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படல் போன்றனவாகும். இதை அவதானிப்பதற்காக உங்களை இரண்டு மணித் தியாலங்களுக்கு வைத்தியர் வைத்தியசாலையில் நிற்குமாறு அறிவுறுத்துவார்.
 • சோதனை ஊசியில் பிரச்சினை இருப்பின் மனி தரிலிருந்து பெறப்பட்ட மருந்து ஏற்றப்படும். இது பெறுமதி கூடியதாகையால் எல்லோருக்கும் ஏற்றப்படுவதில்லை.

ARV எப்படி போடப்படும்?

இது வெளிநோயாளர் பிரிவில் போடப்படும். O, 3, 7, 14, 28 நாட்களில் இடப்படும்.

Dr.க.சிவசுகந்தன்
யாழ்.போதனா வைத்தியசாலை