எனக்கு 10 வருடங்களாக நீரிழிவு உள்ளது. இரண்டு பாதங்களும் விறைப்புத் தன்மையைாக உள்ளன. என்ன செய்யலாம் ?

இந்த நிலைமை நீரிழிவால் ஏற்படும் நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகும். குருதியில் குளுக்கோசின் அளவுகட்டுப்பாடற்று அதி களவில் இருப்பதால் சிலவகையான வெல்லங்கள் உருவாக்கப்பட்டு அவை நரம்பு நார்களைச் சுற்றி இருக்கும் கலங்களில் படிகின்றன. இதனால் அந்தநரம்புகளின்கடத்தல்செயற்பாடுபாதிக்கப்படுகின்றது. இதனை Diabetic Neuropathy என்றுகூறுவர்.

இது கைகளைவிடக் கால்களையே அதிகம் பாதிக்கின்றது. இதன்போது அதிர்வு நோ, வெப்ப உணர்ச்சி ஆகியன உணரப்படுவது பாதிக்கப்படுகின்றது. முதலில் இந்தப் பாதிப்பு பாதத்தில் மட்டும் தொடங்கும். உங்கள் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் இருக்குமானால், இந்த விறைப்புத் தன்மை மேல்நோக்கி அதிகரித்துச் சென்று உங்கள் கால்கள் இரண்டும் முழுமையாக விறைப்புத் தன்மை அடைந்து உணர்ச்சி யற்றுப் போகும்.

பாதிப்பு அதிகரிக்கும்போது உங்களுக்கு காலின் கீழே ஏதோ ஒட்டிஇருப்பது போன்ற உணர்ச்சி, கண்ணை மூடி அல லது இருட்டிலே நடக்கும்போது நிதானம் போன்றன ஏற்படலாம். இவ்வாறு உங்களுக்கு காலில் உணர்ச்சி குறைவாக இருப்பதால் காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஏற்படுவதை நீங்கள் அறியாமல் அல்லது கவனிக்காமல் விடவாய்ப்புள்ளது.

நீரிழிவுஉள்ளவர்களுக்கு காயங்கள் குணமாகும் தன்மையும் குறைவாக இருப்பதனால், உங்களுக்கு ஏற்படும் காயங்கள் மேலும் பெரிதாகி, சத்திரசிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த விறைப்புத் தன்மையை முற்றாகக் குணப்படுத்துவது என்பது சிரமமானது. நீங்கள் உங்கள் குருதிக் குளுக்கோசைச் சரியான அளவுக்குள் கட்டுப்பாடாக வைத்திருப்பதன்மூலம் காலில் விறைப்புத் தன்மை ஏற்படுவதைத் தடுக்க முடிவதுடன், இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மேலும் விறைப்புத் தன்மை மோசமடையாமற் தடுக்கலாம்.

உங்களது கால்களை நீங்கள் காயங்கள் ஏற்படாது கவனமாகப் பாதுகாக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் செருப்பு அணிய வேண்டும். பாதணிகள் உங்களது பாதங்களை விடப்பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது இறுக்க மாகவோ இல்லாமல் சரியான அளவுடையவையாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவிலே படுக்கைக்குச் செல்லுமுன் உங்கள் பாதங்களை நன்றாகக் கழுவி ஏதாவது காயங்கள் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு காயங்கள் இருந்தால் தாமதம் செய்யாது மருத்துவ உதவியை நாடவேண்டும். நகம் வெட்டும்போது காயம் ஏற்படாதவாறு உங்களது விரல் மட்டத்துடன் வெட்டவேண்டும்.

இவ்வாறு உங்கள் கால்களைப் பேணிப் பாதுகாப்பதுடன் நீரிழிவை யும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் விரல்களையோ அல்லது கால்களையோ இழக்க வேண்டிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக் கொள்ளமுடியும்.

டாக்டர் எஸ்.உமைபாலன்