அனாவசிய கட்டுப்பாடுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்(பகுதி 3) – சி.சிவன்சுதன்

அநாவசிய கட்டுப்பாடுகள் கட்டுக்கடங்காது நீண்டு செல்வதனால் பல சுகாதார பிரச்சினைகள் தோன்றுகின்றன. இனிப் பான பண்டங்களை உணன்னக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பலருக்கு மனக்கவலையை ஏற்படுத்தி நிற்பதுடன் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

சாதாரண நிறையுடைய ஆரோக்கியமான ஒருவர் அளவுடன் சீனி, சர்க்கரை போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. அதிகரித்த பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சீனிக்கு பதிலாக சீனிச்சுவையை ஒத்த இனிப் புட்டிகளை பாவிக்க முடியும். சிற்றுண்டி வகைகள், பாயாசம், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு கூட இந்த இனிப்புட்டிகளை பாவிக்க முடியும். இவை பாதுகாப்பானவை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சில விசேட நிகழ்வுகளின் பொழுது சீனி சேர்க்கப்பட்ட உணவு வகைகளை உண்டு விட்டால் அது சம்பந்தமாக அதிகம் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை அவர்களில் அன்றாட வாழ்க்கையில் தவிர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் 30 நிமிடங்கள் தொடக்கம் 60 நிமிடங்கள் வரை TV பார்ப்பது சுகாதாரப் பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. இன்றைய நிலையில் கைத் தொலைபேசி வாழ்க்கையின் ஒரு இன்றி அமையாத அங்கமாக மாறி இருக்கிறது. இதனை பாவிப்பதனாலும் பாரிய சுகாதாரப்பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் இவற்றிற்கு அடிமையாகி இவற்றை தீய வழிமுறைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக் கிறது.

மகிழ்ச்சியான வேளைகளில் சிரித்து குதூகலிப்பதற்கும் கவலையான வேளைகளில் அழுவதற்கும் இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மன உணர்வு வெளிப்பாடுகள் இன்னொருவரை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசிய மாகின்றது.

எமது அன்றாட வாழ்க்கையில் ஓய்வு இன்றி அமையாத தாகும். “சும்மா இருக்காதே” என்று ஒருவரை எந்த நேரமும் தொந்தரவு செய்து கொண்டிருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனாவைத்தியசாலை.