ஆட்டிசம் பிள்ளைகள் எந்த விகிதத்தில் பாதிக்கப்படு கிறார்கள்? காவேரி சிவரூபன், MD. சிவாணி பத்மராஜா,MD.

பிள்ளைகள் எந்த விகிதத்தில் பாதிக்கப்படு கிறார்கள்?
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் ( CDC ) 2014 ம் ஆண்டு புள்ளி விபரத் தரவுகளின் படி 68 குழந்தைகளில் ஒரு குழந்தை நிலைமையால் பாதிக்கப்படுகிறது.
இந்நிலைமை பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளில் ஏறத்தாழ 5 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

இந்த நிலைமையை பூரணமாகக் குணப்படுத்துவதற்கு மருந்து உள்ளதா?
இது நோயல்ல. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் நிலைமையாகும்.
ஆனால் இடையீடுகள் உள்ளது, இவ்விடையீடுகளை காலதாமதமின்றி ஆரம்பித்தால் நிலைமை கடினமாவதைத் தடுத்து இக்குழந்தைகளும் ஓரளவுக்கேனும் சாதாரண குழந்தைகள் போல் செயற்பட வாய்ப்புகள் உள்ளது.
எந்த வயதில் இந்த இடையீடுகளைத் தொடங்க வேண்டும்?
இடையீடுகளை காலதாமதமின்றி , நிலைமையை அடையாளம் கண்டவுடன் தொடங்க வேண்டும்.

எப்படியான இடையீடுகள் ( Interventions ) பரிந்துரைக்கப்பட்டுள்ளன?
பின்வரும் இடையீடுகள் இக்குழந்தைகளை சமுதாயத்துடன் ஒத்து வாழ்வதற்கு உதவி செய்வதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
1. பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு ( Applied behavior analysis ).
2. தொழில் சிகிச்சைப் பயிற்சியும் உணர்ச்சி ஒருங்கிணைப்பும். ((occupational therapy and sensory integration ).
3. பேச்சு சிகிச்சைப் பயிற்சி ( speech therapy ).
4. உடல் சிகிச்சைப் பயிற்சி ( physical therapy ).

இப்படியான இடையீடுகளை எப்படித் தொடங்க முடியும்?
இடையீடுகளைத் தொடங்குவதற்கு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களின் உதவியை நாடலாம்.
இதற்கு வைத்தியரின் மதிப்பீடும் பரிந்துரையும் தேவை.

இப்படியான இடையீடுகளை எங்கு தொடங்க முடியும்?
இந்நிலைமைக்கான சிகிச்சையை வீடுகளிலும், பாடசாலைகளிலும், “மாதவம்” போன்ற சிறப்புப் பயிற்சி நிலையங்களிலும் தொடங்கலாம், தொடரலாம்.

காவேரி சிவரூபன், MD. சிவாணி பத்மராஜா,MD.

தொடரும்.