அனாவசிய கட்டுப்பாடுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்(பகுதி 5) – சி.சிவன்சுதன்

ஒருவருக்கு உயர்குருதி அமுக்கமோ அல்லது நீரிழிவு நிலையோ ஏற்பட்டு விட்டால் அவருக்கு பால், முட்டை என்பன கொடுக்கக் கூடாது என்று அவர் மீது சமூகத்தினால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அத்துடன் இவை ஆபத்தான உணவு வகைகள் எனக் கூறி அவர் பயமுறுத் தப்படுகிறார்.

இதனால் அவர் “நான் பயந்து பால், முட்டை என்பன உண்பதில்லை என சொல்லத் தலைப் படுகிறார். இந்த உன்னதமான நிறை உணவுவகை களை அவர் தவிர்த்து விடுவதால் அவரின் உடல் நிலை மேலும் பலவீனம் அடைகிறது.

நாம் எமது நாளாந்த வாழ்விலும் இங்கே குப்பை போட வேண்டாம் இங்கே துப்ப வேண் டாம். இங்கே சிறுநீர் கழிக்க வேண்டாம்”, “அழ வேண்டாம்”, “சத்தமிட்டு சிரிக்க வேண்டாம் , “உப்பு, இனிப்பு, உறைப்பு, புளிப்பு எதுவுமே வேண்டாம் என பற்பல கட்டுப்பாடுகளால் கட்டுண்டு கிடக்கிறோம் என்பது வேதனையானதே.

குப்பைத் தொட்டி ஒன்றை வைத்து இங்கே குப்பை போடவும் என அறிவுறுத்துவது கூடிய பயனைத் தரும். அதேபோல அருகில் எங்கே மலசலகடம் இருக்கிறது என்பதை எழுதி வைப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

நடைமுறைப்படுத்த முடியாத அல்லது நடை முறைப்படுத்துவது, கடினமான கட்டுப்பாடுகளை விதிப்பது எதிர்மறையான விளைவுகளை தோற்றிவிக்கலாம். ஒருவர் வாழும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக் கியத்துவம் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக, திருப்தியாக, நிறைவாக வாழ்கிறார் என்பதற்கும் கொடுக்கப்பட வேண்டும். அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கைத் தராதரத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“கிரந்தி உணவுகள் கூடாது, குளிர் உணவுகள் ஆபத்தானவை, இரவில் இலைவகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும், சூடான உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் இதுபோன்ற கட்டுப் பாடுகளும் மனிதன் சுதந்திரமாக, ஆரோக்கிய மாக உண்ணுவதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி நிற்கின்றன.

ஒருவருக்கு ஒரு வகையான உணவு ஒத்துக் கொள்ளுமாயின் ஒரு ஒவ்வாமை விளைவுகளும் ஏற்படாத விடத்து அந்த உணவு வகைகளை அவர் உண்ண முடியும். அநாவசியமாக உணவு வகைகளை வகைப்படுத்தி தவிர்த்து விடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.

தொடரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனாவைத்தியசாலை.