நோயையும் நோவையும் தவிர்த்துக்கொள்வது எப்படி? – திருமதி சதானந்தி நந்தகுமாரன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இது நம் முன்னோர் மொழிந்து சென்ற நல்வாக்கு. இந்த நோயினால் “நோவும்” நோவினால் (Pain) நோயும் வெளிக்கொண்டு வரப்படுகின்றது. நோ/வலி என்றால் பல உணர்வுகளால் உடற்றொழிலியலால் கலக்கப்பட்டவிரும்பத்தகாத ஒரு உணர்வே ஆகும். இது பல வடிவங் களால்இணைந்து உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருடையவாழ்க்கையிலும் வலி / நோ அனுபவிக்கப்பட்டிருக்கும். இது பலமுறை. சில முறை உணரப்பட்டிருக்கலாம். இது பல வகைப்படும். அத்துடன் இதன் உணரும் தன்மையும் (Degree) மாறுபடலாம்.

 1. நோவின் தண்மை / இயல்பு :
  • ஒவ்வொருவராலும் உணரப்படக்கூடியது.
  • ஒருவருடைய நோவை இன்னொருவரால் உணரமுடியாது.
  • ஒருவரின் அனுபவத்தால் (Experience), தாங்கும் இயல்பால் (tolerance) இதன் விளைவுகள் வெளிக்காட்டப்படும்.
  •  இந்த நோ ஒரு வகையில் உடற்றொழிலியலில் ஏற்படும் வேண்டாத மாற்றத்தை முற்காட்டும் அறிகுறி அல்லது எச்சரிக்கை சமிக்ஞை ஆகும்.
 2. நோவின் கூறுகள் / அடங்குபவை
  இதனுள் ஐந்து பிரிவுகள் உண்டு

  1. நோவினால் ஏற்படும் மன எழுச்சி (Emotion)
  2. நோவினால் ஏற்படும் நடத்தை மாற்றம் – (Behavioural)
  3. நோ பற்றிய நம்பிக்கை, நடத்தை, மதிப்பிடும் தன்மை அதன் விளைவுகள்.
  4. நோ எவ்வாறு உணரப்பட்டு மூளைக்கு/மைய நரம்பு தொகுதிக்கு கடத்தப்படுகிறது.
  5. நோவால் உடலில் ஏற்படும் மாற்றம்.
 3. நோவால் உடற்றொழிலில் ஏற்படும் செய்முறை (Pain Process) இது மூன்று பழநிலைகளைக் கொண்டது. அவையாவன
  1. ஏற்றல்
  2. உணரல்
  3. விளைவு ஏற்படல்
 4. நோவை பாதிக்கும் காரணிகள்
  • நிலைமை / Situation – தனிமையில், வைத்திய சாலையில், நண்பர்கள் மத்தியில், குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில்
  • கலாசாரம் / Culture – சிறுமி, சிறுவன், இளவயதினர், முதியோர்
  • வயது / Age – சிறுவர் / வயதானோர் / முதியவர்
  • பால் Sex – ஆண்கள் / பெண்கள்
 5. நோவிண் அர்த்தம்
  நோவின் தாக்கம் / விளைவு ஒருவரில் ஏதாவது ஒரு வகையில் வெளிக்காட்டப்படும். அதனால் போலும் எம் முன்னோரின் வாக்கு ஒன்று உண்டு. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று. இந்த வகையில் இது பின்வரும் காரணிகளால் உணரப் படலாம். அவையாவன: பயம், இழப்பு, தண்டனை, எதிர்நோக்கல் போன்றனவாகும். உதாரணமாக பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதுள்ள நோவும் பெண் ஒருவரின் வயிற்றை சத் திர சிகிச்சையின் போது ஏற்படும் நோவும் வேறுபடும். நோவா னது உடலியல், உளவியல் சார்ந்த கலவையாலானது.
  நோவின் அர்த்தத்தைப் பாதிக்கும் காரணிகளாவன,

  1. பயம்/Anxiety பயம் அதிகமுள்ளவர்களினால் நோவும் அதிகளவாக உணரப்படும். உளவியல் ரீதியாக சமான நிலை யில் இருப்பவர்களுக்கு நோவை தாங்கும் சக்தி (Tolerance) அதிகமாக இருப்பதால் நோ உணரப்படும் அளவும் குறைவு.
  2. களைப்பு /Fatigue :- களைப்பான நேரத்தில் நோ உணரப்படும் அளவு அதிகமாக காணப்படும்.
  3. கவனம் / Attention :- ஒருவருக்கு கிடைக்கும் கவனத்திற்கு ஏற்ப நோவின் தீவிரமும் அதிகமாகும்.
  4. .முன் அனுபவம்/ Previous Experience :-ஒவ்வொருவருக்கும் நோ பொதுவானது.ஒரு தடவை ஏற்பட்ட நோவின் அனுபவமானது அடுத்த தடவை ஏற்படும் போது தீவிரம் குறை வாக உணரப்படும்.
  5. சமாளிக்கும் ஆற்றல் – ஒருவர் நோவை எதிர்கொள்ளும் விதம், அதனை தாங்கும் சக்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீவிரம் உணரப்படும்.
  6.  குடும்ப சமூக ஆதரவு :- பெற்றோள், குடும்ப அங்கத்தவர் கள் மற்றும் குறிப்பிட்டவர்களின் (நண்பர்) ஆதரவு. உதவி என்பன நோவின் தீவிரத்தை மாற்றக்கூடியது.
 6. நோவின் வகை / Types Of Pain பலவிதமான அடிப்படை காரணிகளைக் கொண்டு நோவை வகைப்படுத்தலாம். அவற்றுள் அடங்குபவையான.
  • ஆரம்பிக்கும் விதம் – சத்திர சிகிச்சைக்கு பின்
  • காலம் – திடீரென / நாற்பட்ட
  • தீவிரம்
  • கடத்தும் விதம்
  • இடம்
  • காரணம் – நரம்பு பாதிப்பால் / உளவியல் ரீதியாக
  • காரணத்தை உண்டாக்கும் விசை – தானாக ஏற்பட்டதா? வேறுகாரணிகளால்
 7. நோய் காரணமாக ஒருவரில் ஏற்படும் மாற்றங்கள்
  1. பயம்
  2. அறிவில் குறைவுபடல்
  3. போசணை நிலை மாறுபடும்
  4. உடலில் மாற்றம்
  5. மலச்சிக்கல்
  6.  உடலசைவு குறைவுபடும்
  7. குடும்பத்தவருடன் சமாளிக்கும் இயல்பு குறையும்
  8.  தன்னைத்தானே சமாளிக்க முடியாமை
  9. வலுவற்ற தன்மை
  10. குடும்ப செயன்முறை மாறுபடும்
  11. தம் வகிபாகங்களில் மாற்றம்
  12. களைப்பு
  13. தன்னைத்தான் கவனியாமை
  14. பயம்
  15. பாலியல் மாற்றம்
  16. மனக்குறை / மனத்தாங்கலிற்குட்படல்
  17. நித்திரையில் மாற்றம்
  18. சமூக தனிமைப்பாடு சிந்தனை மாற்றம்
 8. நோவிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகள். அடிப்படையாக இரண்டு வகைப்படும்.
  1.  உடலை துளைக்காத / மருந்துகள் பயன்படுத்தப் படாத முறை இம்முறை அதிகளவு நோவை கையாள / பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் அடங்குபவை.
   1. நம்பகத்தன்மையான சிகிச்சைக்குரிய உறவு முறை – இங்கு வலியுடன் இருப்பவரின் உளநிலைக்கு ஏற்ப அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமான முறையில் அவருடன் பராமரிப் பில் அவரையும் இணைத்துக் கொள்ளல்.
   2. பயத்தை போக்கல் இதனை எப்படி செய்யலாம்? அருகில் நிற்றல் / இருத்தல் -உணர்வை பயத்தை கதைக்க அனுமதியளித்து அவரால் அதை வெளிப்படுத்துவதை செவிமடுத்தல். -தொடர்பாடலின் போது விருப்புடன் அவர் கூறு வதை கேட்டல். -நோவைக் குறைக்கும் வழிகளை விளக்கிக் கூறல். உ+ம் -தியானம், நல்ல தொடுகை, தடவி விடல், குளிரூட்டல்
   3.  நோவின் மீதுள்ள கவனத்தை இன்னொரு திசைக்கு மாற்றுதல் தியானம், தொலைக்காட்சி பார்த்தல், வானொலி கேட்டல்,பயனுள்ள கலந்துரையாடல், கை வேலை செய்தல் போன்றன செய்யலாம்.
   4. உடலியல் பராமரிப்பு வழங்கல் – மசாஜ், குளிர், சூடு ஒத்தணம், சிறிதளவு அழுத்தம் கொடுத்தல் போன்றன செய்யலாம். ஒருவருக்கு ஏற்படும் நோவின் காரணமாகவே அதிக மானோர் சுகாதார சேவையை (Health Care) பராமரிப்பை நாடுகின்றனர். எனவே இந்த நோவை ஒரு நல்ல அறிகு றியாகக் கொண்டு நாம் எம்மிடம் உள்ள ஒரு நோயினை முன்கூட்டியே அறிந்து கொண்டு எமது உடல் நிலையை ஆரோக்கியமாக வைப்போம். உதாரணமாக தலையிடி, நெஞ்சு நோ, வயிற்று நோ, மூட்டு நோ போன்றவற்றை சாதா ரணம் என்று நினைக்காது இவை தீவிரமாகவும் தொடர்ச் சியாகவும் இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுவது எம் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு விடயமே. இந்த நோவை கையாள்வதே சுகாதார பராமரிப்பாளர் களின் / அங்கத்தவர்களின் பெரும் சவாலுமாகும். இதனைக் கையாள்வதில் பெருமளவு பங்குவகிப்பவர்கள் இந்த சவாலை எதிர்கொள்பவர்கள் தாதியர்களும் களநிலை வைத்தியர்களும் அவர்களது குழு அங்கத்தவர்களுமே. இதற்காக இவர்களில் பலர் நோ பற்றிய போதிய அறிவும் அதனை முகாமைப்படுத்தும் ஆற்றல் என்பவற்றில் தேர்ச்சியுடையோராகி உள்ளனர். இப் பராமரிப்பு அங்கத்தவர்கள் நோவை நீக்கி, புரிந்து கொள்ள, நோவிலிருந்து விடுவிக்க அவர்கள் நோவை கையாள பயிற்றுவிக்கும் ஆற்றல் உள்ளோராக இருக்கின்றார்கள். உளநோ. உடல்நோ இரண்டிற்கும் சிகிச்சை/பராமரிப்பு உண்டு. உள நோவை ஆற்றுப்படுத்தி தியானத்துடன் இறைவனுடன் கதையுங்கள் தீர்வு உண்டு. உடலியல் நோவை சாதாரண மாக கருத்திற்கொள்ளாது வைத்திய ஆலோசனைப்படி சிகிச் சையைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ்வதும் முக்கியம்தானே.

 

திருமதி சதானந்தி நந்தகுமாரன்
சிரேஷ்ட தாதிய போதனாசிரியர்
யாழ்.தாதியர் கல்லூரி