எனக்கு நீரிழிவு கொலஸ்திரோல் என்பன உள்ளன. எனக்கு சில காலமாக தாம்பத்திய உறவில் பிரச்சினை இருக்கின்றது ஆலோசனை கூறவும்?.

கேள்வி: எனது வயது 36 ஆகும். எனக்கு நீரிழிவு கொலஸ்திரோல் என்பன உள்ளன. எனது நீரிழி வானது கட்டுப்பாடற்று இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார். எனக்கு சில காலமாக தாம்பத்திய உறவில் பிரச்சினை இருக்கின்றது. எனது ஆண்குறிவிறைப்படைவது குறைவாக இருப்பதை சில காலமாக உணர்ந்து வருகின்றேன். இதுபற்றி விளக்கம் தரவும்?

பதில்: நீரிழிவு நோயானது கட்டுப்பாடற்றுச் செல்லும் போது உடலின் பல அங்கங்கள் சிறிது சிறிதாக செயலிழக்க நேரிடுகின்றன. உடலின் பெரிய குருதிப் குழாய்களில் ஏற்படுகின்ற மாரடைப்பு பக்கவாதம் போன்றவையும் சிறிய குருதிக் குழாய் களில் ஏற்படுகின்ற கண்பார்வை குறைதல், சிறு நீரக செயலிழப்பு நரம்புகள் பாதிப்பு போன்ற வையும் இதற்கு உதாரணங்களாகும். ஆண்குறி விறைப்படையாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நீரிழிவு நோயானது கட்டுப்பாடின்றி இருக்கும்போது இந்தப் பிரச்சினையானது ஏற்படுகின்றது. இதேபோல கொலஸ்திரோல், குருதியமுக்கம் அதிகரிப்பு உள்ளவர்களுக்கும் இது ஏற்படுகின்றது. அதிகரித்த மது புகை போதைப் பாவனையும் இதற்குக் காரணமாக அமைகின்றது. சில வகையான ஹோர்மோன் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் சில மருந்து வகைகளும் கூட இதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே, உங்களுடைய நீரிழிவு நோயைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும். உங்களின் பிரச்சினைக்கு பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளபடியால் தயக்கமின்றி உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனைகளையும் சிகிச்சை வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ளவும்.
மருத்துவர் M.அரவிந்தன்
அகஞ்சுரக்கும் தொகுதி வைத்திய நிபுணர்,