முகப்பருக்களைக் குறைக்க…..

இளம் வயதினரிடையே இது ஒரு முக்கிய பிரச்சினையாகவும் இருக்கிறது. எமது தோலின் கீழ் காணப்படும் நெய்சுரப்பிகளால் சுரக்கப்படும் Sebum எனும் திரவப்பொருள் அதிகமாக சுரக்கும்போது முகப்பருக்கள் தோன்றும் வாயப்பு உண்டு. சுரக்கப்படும் அளவை பொறுத்து பருக்களின் அளவும் வேறுபடும். இலிங்க ஓமோன்கள் இளம் பருவத்தில் அதிகமாகச் சுரப்பதாலும் பருக்கள் இப்பருவத்தில் அதிகமாக தோன்றும். எமது தோலில் காணப்படும் பக்ரீரியாக்கள் தோலின்கீழ் உள்ள நெய்சுரப்பிகளில் தொற்றுக்களை ஏற்படுத்துதல், பாரம்பரிய காரணிகள், அதிக வெப்பம், அழுக்குகள் படிந்து தோலின் துளைகளில் அடைப்புகள், போன்ற பல காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

எனவே முகப்பருக்களைக் குறைக்க ஒரு நாளைக்கு 5 – 6 முறை முகத்தை சுத்தமாக கழுவுதல், எண்ணெய் பசை அதிகமாக உள்ள சோப்புக்கள் பாவித்தலைத் தவிர்த்தல். அதிகளவு நீர் அருந்துதல், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் உணவில் அதிகமாக எடுத்தல்,
சருமம் வரண்டு போகாமல் இருப்பதற்கு கிளிசரின், olive oil பாவித்தல்.
உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்ககூடிய உணவுகள் பானங்கள் எடுத்தல்
நீராவி முகத்துக்க பிடித்தல்.
பருக்கள் தோன்றினாலும் அவற்றைக் கிள்ளவோ, நசுக்கவோ, உடைக்கவோ கூடாது. இதனால் வடுக்கள் வருவதற்குரிய வாய்ப்புக்கள் உண்டு. தீவிரமாக இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுதல் அவசியம்.

எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்