எனது வைத்தியர் கொலஸ்ரோல் ரிப்போட்டைப் பார்த்து எனக்கு கொலஸ்ரோல் அதிகமாக இருப்பதாகவும் மருந்து எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதே ரிப்போட்டை எனக்கு அறிமுகமான பிறிதோரு வைத்தியரிடம் காட்டிய போது அவர் எனக்கு கொலஸ்ரோல் அதிகமில்லை எனவும் மருந்துகள் அவசியமில்லை எனவும் கூறினார். இந்த குழப்பத்தை தீர்க்க உதவுங்கள்.

என்னைப் பரிசோதித்த எனது வைத்தியர் கொலஸ்ரோல் ரிப்போட்டைப் பார்த்து எனக்கு கொலஸ்ரோல் அதிகமாக இருப்பதாகவும் மருந்து எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதே ரிப்போட்டை எனக்கு அறிமுகமான பிறிதோரு வைத்தியரிடம் காட்டிய போது அவர் எனக்கு கொலஸ்ரோல் அதிகமில்லை எனவும் மருந்துகள் எடுக்க அவசியமில்லை எனவும் கூறினார். கொலஸ்ரோல் அதிகம் என்று எவ்வாறு தீர்மானிப்பது? இந்த குழப்பத்தை தீர்க்க உதவுங்கள்.

உங்களுக்கு கொலஸ்ரோல் அதிகம் எனத் தீர்மானிப்பதற்கு கொலஸ்ரோல் ரிப்போட் மட்டும் போதாது. உங்கள் கிளினிக் கொப்பியைப் பார்வையிட்டு உங்களை சோதனைகள் செய்த பின்பே தீர்மானிக்க முடியும். ஏனேனில் சலரோகம் அல்லது இருதய வருத்தம் இருப்பின் கொலஸ்ரோலின் அளவு மிகக் குறைந்த அளவிலேயே பேணப்பட வேண்டும். உதாரணம் – ஒரு சலரோக நோயாளி தனது கொலஸ்ரோல் ரிப்போட்டில் LDL இன் அளவை 100mg/dl க்குள் பேண வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் உங்கள் கொலஸ்ரோலுக்கு மருந்துகள் தேவையா என தீர்மானிக்க உங்களுக்கு வேறு என்ன மருத்துவப் பிரச்சினைகள் இருக்கு எனத் தெரிந்தாக வேண்டும். எனவே உங்களுக்கு கொலஸ்ரோல் பிரச்சினைக்கு மருந்து அவசியமா இல்லையா என்பதை்த தீர்மானிக்க உங்கள் சொந்த மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும் இரண்டாவதாகப் பார்த்த வைத்தியர் தனியே உங்கள் கொலஸ்ரோல் ரிப்போட்டை மாத்திரமே பார்வையிட்டுள்ளார் இம்முறையில் உங்கள் கொலஸ்ரோல் அளவு பற்றி தீர்மானிப்பது சற்று சிரமம். மருத்துவ ஆலோசனை பெறுவதாக இருந்தால் முதலில் உங்கள் முழுமையான மருத்துவத் தகவல்களைக் கூறியே ஆலோசனை பெறவேண்டும்.