உடல் குண்டாக மாறுதவற்கு ஒரு யோசனை கூறுங்கள்.

எனது உடல் தொடர்ந்தும் மெலிவாகவே இருக்கின்றது. எவ்வளவுதான் சத்தான உணவுகளை எடுத்தாலும் பயனில்லை. தயவு செய்து எனது உடல் குண்டாக மாறுதவற்கு ஒரு யோசனை கூறுங்கள்.

முதலில் நீங்கள் எப்பொழுதும் மெலிவானவரா அல்லது உங்கள் நிறை அண்மைக் காலமாக குறைவடைந்து செல்கின்றதா என அறியவேண்டும். நிறைகுறைவதற்கு சில நோய் நிலைமைகளும் காரணமாகலாம். உதாரணமாக தைரொக்சின் சுரப்பி அதிகமாக சுரத்தல் உணவு அகத்துறிஞ்சல் குறைவாகவுள்ள நோய்கள், அனுசேபத் தொழிற்பாடுகளில் குறைவுள்ள நோய்கள், இவ்வாறான நோய்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு உங்கள் அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கலாம். நோய்கள் இல்லாத நிலையில் ஒருவரின் நிறை குறைவாக அமைவதற்குப் பின்வரும் காரணிகள் ஏதுவாகலாம். பரம்பரைக்காரணி, உணவின் தரம் குறைவாக இருத்தல் உண்ணும் பழக்கத்தில் குறைபாடு இருத்தல் கீழ்வருவன உங்கள் நிறையை அதிகரிப்பதற்கு உதவலாம்.

காலை உணவு நேரத்திற்கு உண்ணல் ( உதாரணம் 7 மணி)
இரவு உணவை நேரந்தள்ளி உண்ணல் ( உதாரணம் 10 மணி)
உணவுக்கு முன் பால் மற்றும் தேனீர் அருந்துவதைத் தவிர்த்தல்
மூன்று வேளை பிரதான உணவிலும் கலோரி நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும் ( உதாரணம் பயறு சேர்ந்த பாற்சோறு – காலை உணவு)
முற்பகல் 10மணி பிறபகல் 4 மணி ஆகிய வேளைகளிலும் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தவும். ( உதாரணம் பாலும், கலோரி கூடிய பிஸ்கட்டுகளும்)
உங்கள் நிறையை 2 கிழமைகளுக்கு ஒரு முறை அளக்கவும் இவற்றை முயற்சி செய்து பார்த்தபின்பு உங்கள் நிறை குறைந்து கொண்டு சென்றால் வைத்திய ஆலோசகையை மீண்டும் நாடவேண்டும்.