தினமும் இரவு நல்ல தூக்கம் வருவதற்கு ஏதேனும் பரிகாரம் தங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

உங்கள் இரவுணவை வேளையுடன் உண்ணுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ( 20 நிமிடம். 4 -5 மணிநேரம் அல்லது நித்திரைக்கு முன்னதாக)
சுடுநீர்க் குளியலின் பின் தூங்கச் செல்லுங்கள்
நித்திரையைத் திணித்து மேற்கொள்ளாதீர்கள். தூக்கம் வரும் போதே படுக்கைக்குச் செல்லுங்கள்.
வயதிற்கேற்ற வகையிலேயே தூங்கும் நேரம் காணப்படும் என்பதால் தினமும் நித்திரைக்குச் செல்லுகின்ற, நித்திரையால் எழுகின்ற நேரங்களை ஒழுங்காக வகுத்து கடைப்பிடியுங்கள்.
நித்திரைக்குச் செல்ல முன் அதிக நீர் அருந்துவதைத் தவிருங்கள், இதன் மூலம் இரவில் சிறுநீர் கழிப்பதற்க்காக நித்திரையில் ஏழுவதை தவிர்க்க முடியும்.
கபீன் உடைய பானங்களை (caffeinated beverages) கோப்பி, தேநீர், மென்பானங்கள் என்பவற்றை பின்னேரத்தின் பின்னர் (6PM) அருந்தாதீர்கள்.
பசியுடன் நித்திரைக்குச் செல்லாதீர்கள்.
நித்திரைக்குச் செல்ல முன் இயன்றளவு உங்கள் கவலைகளைத் தீர்க்க முயலுங்கள். அன்றைய நாள் சம்பவங்களை தினக்குறிப்பேட்டில் எழுதுங்கள்.
மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தலைத் தவிருங்கள்.
பகலில் அதிகம் தூங்குவதைத் தவிருங்கள்.
உங்கள் படுக்கையசை் சூழலை உங்களுக்கு ஏற்றதாக மாற்றியடையுங்கள் (தேவையான அளவு காற்றோட்டம், ஏற்ற அறை வெப்பநிலை, மென்வெளிச்சம், சத்தமற்ற / உங்களுக்கு விரும்பிய மெல்லிசை, உங்களுக்கு ஏற்ற அறை நிறம், உங்களுக்கு ஏற்ற போர்வை, உங்களுக்கு ஏற்ற மெத்தை … போன்றன)
படுக்கையை நித்திரைக்காகா மட்டும் பயன்படுத்துங்கள். (படுக்கையிலிருந்து தொலைக்காட்சி பார்த்தல் உணவுண்ணல் போன்றவற்றைத் தவிருங்கள்)
படுக்கையறையைத் தூய்மையாக வைத்திருங்கள்.
உங்களுக்கு பிடித்த கதைப்புத்தகம், மன அமைதி தரவல்ல நூல்களை நித்திரைக்கு செல்ல முன் படிக்கலாம்.
மன அமைதியை ஏற்படுத்துங்கள் ( தியானம் செய்தல், தசைப்பயிற்சியில் ஈடுபடல், படுக்கையறை வெளிச்சத்தைக் குறைத்தல், தூங்கச் செல்ல முன் மெல்லிசை கேட்டல். )
.
நீங்கள் படுக்கைக்குச் சென்று 30 நிமிடங்களின் பின்னரும் தூக்கம் வரவில்லையாயின் எழுந்து வேறு அறையில் மன அமைதிப்படுத்தும் மேற்படி நுட்பங்களைக் கையாளுங்கள்.