35 வயதுடைய சுகதேகிப் பெண்மணிக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் கலோரிப் பெறுமானம் யாது?

கலோரிப் பெறுமானம் என்பதால் குறிப்பிடப்படுவது யாது? சாதாரண வீட்டுவேலைகள் மட்டும் மேற்கொள்ளும், உடற்பயிற்சி விஷேட வேலைகள் ஏதுவும் மேற்கொள்ளாத எந்த வித நோய் நோடியுமற்ற, உயரத்திற்கேற்ற நிறை கொண்ட 35 வயதுடைய சுகதேகிப் பெண்மணிக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் கலோரிப் பெறுமானம் யாது?

கலோரி என்பது சக்தியை அளவிட உதவும் ஒரு அலகாகும். ஒருவருடைய சக்தித் தேவையும் கலோரி அலகில் அளவிடப்படுகின்றது. சுகதேகி ஒருவருக்கு நாளாந்தம் தேவைப்படுகின்ற கலோரியானது பின்வருமாறு வளர்ந்த சுகதேகி ஆண் ஒருவருக்கு –2500kcal வளர்ந்த சுகதேகி பெண் ஒருவருக்கு -1900kcal இதை விட இக் கலோரிப் பெறுமானமானது அவரது உடற்திணிவு, உயரம், நாளாந்த தொழிற்பாடு போன்றவற்றிலும் தங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.