நீரிழிவு ஆண்டின் 365 நாட்களையுமே நீரிழிவு நோய் தினமாக பிரகடனப்படுத்துமளவில் முக்கியம் வாய்ந்தது. Dr. Ragunathan M.K. / Translated by Dr Rajendram Visakaruban

இந்த மெல்லக் கொல்லும் நோய் ஆண்டின் 365 நாட்களையுமே நீரிழிவு நோய் தினமாக பிரகடனப்படுத்துமளவில் முக்கியம் வாய்ந்தது. உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14 மட்டும் நடை பவனி செல்லும் நாங்கள் [ ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட ] எஞ்சிய 364 தினங்களும் அதை செய்ய மறந்து விடுகிறோம்.

ஞாபகத்தில் கொள்ளுங்கள்

நாளொன்றுக்கு முப்பது நிமிடங்கள் ஓடுதல், விரைவாக நடத்தல், சைக்கிள் ஓடுதல், நீந்துதல், கயிறு அடித்தல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்து வருவது நீரிழிவு நோயையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கவும் தாமதிக்கவும் உதவும்.

” குறைந்த அளவிலான நீரிழிவு ” என்று ஒன்று இல்லை. ஒருவர் தமக்கு குறைந்த அளவிலான நீரிழிவுதான் உண்டு என நினைப்பது முட்டாள்தனமானதாகும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு பிள்ளைப்பேற்றுடன் இல்லாமல் போகும் என உங்கள் மகப்பேற்று மருத்துவர் கூறினாலும் உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றாவிட்டால் நீங்கள் வெகு சீக்கிரமே நீரிழிவு நோயாளியாகும் வாய்ப்பு உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நீங்கள் மூன்றரைக் கிலோவிற்கு மேற்பட்ட நிறையுடைய குழந்தையொன்றை பிரசவித்திருந்தால் உங்களிட்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே உங்கள் குருதியில் சீனியின் அளவை வருடந்தோறும் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு [ உங்களால் அது முடியும் ] மருந்துகளையோ இன்சுலினையோ எடுப்பது மட்டும் போதுமானதல்ல. உங்கள் குருதி சீனி மட்டம், குருதியமுக்கம் மற்றும் குருதி கொலெஸ்ட்ரோல் மட்டம் என்பவற்றையும் கிரமமாகப் பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் தாக்கும் வரை காத்திராது நீரிழிவு நோய் பற்றி விழிப்புடன் இருங்கள்.

Dr.Ragunathan M.K. / Translated by Dr Rajendram Visakaruban