மனமுருகி தியானித்து வணங்குவது என்பது Meditation, Relaxation சுவாசப்பயிற்சி என்ற மருத்துவ விஞ்ஞானப்பதங்களுக்குள் அடங்குகிறது. சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்

கடவுளைப் பக்தியுடன் மனமுருகி, மனம் ஒருமித்து தியானித்து வழிபடும் முறை அன்று தொட்டு எல்லா மதங்களிலுமே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பல தீமைகள் நீங்கும், நாம் காப்பாற்றப்படுவோம், சுகம்பெறுவோம், பல நல்ல விடயங்கள் நடைபெறும், மனம் சாந்திபெறும் என்ற நம்பிக்கை மதநம்பிக்கை உடைய அனைவரது மனங்களிலும் குடிகொண்டிருக்கிறது. இவை உண்மைதான என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது. ஆனால் இவை உண்மை என ஆராச்சிகள் நீரூபித்து வருகின்றன.

மனம் ஒருமித்து மனமுருகி தியானித்து வணங்குவது என்பது Meditation, Relaxation சுவாசப்பயிற்சி என்ற மருத்துவ விஞ்ஞானப்பதங்களுக்குள் அடங்குகிறது. இவற்றில் ஏற்படும் அனுகூலங்கள் பல இவற்றை ஒழுங்காகச் செய்துவந்தால் மனப்பாரம் குறைவதுடன் பல கொடிய நோய்களிலிருந்தும் காப்பற்றப்படுவதுடன் உடலில் நல்ல பல மாற்றங்கள் நடப்பதற்கும் இது வழிகோலும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மதவழிபாட்டுமுறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மீக பலமும் பொருத்தியவனாக ஒரு ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற்கின்றது.

சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்