ஞாபகமறதி நோய் – அல்செய்மர்ஸ். ஸ்ரீ.நகுலேஸ்வரன். முதியோர் மனநல விசேட வைத்திய நிபுணர், ஐக்கிய இராச்சியம்.

அல்செய்மர்ஸ்வகை ஞாபக மறதி நோயானது அண்ணளவாக 60% ஆன ஞாபக மறதி நோய்க்கான காரணமாகும். இந்நோயானது பரம் பரையிலும் கடத்தப்படக்கூடியது. அதை விட எவரும் இந் நோயால் பாதிப்படையக் கூடும். இந்நோயானது மெதுவாக முதிர்ச்சியடைந்து இறுதியில் பாதிக்கப்பட்டவர் சுயநிலை மறந்தவராக எல்லாவகையான நாளாந்த கடமைகளுக்கும் மற்றவர்களில் தங்கியிருப்பவராக மாற்றமடைவார். சில சமயங்களில் இவர்கள் தமது நெருங்கிய உறவினரான மனைவி/கணவன் பிள்ளைகள் போன்றோரைக்கூடஅடை யாளம் காண முடியாதவராய் இருப்பார்கள்.

பொதுவாக இந்நோய் அடையாளம் காணப்பட்டு 7-15 வருடங்கள் வரை ஆயுட்காலம் இருக்கும். பொதுவாக இவர்கள் வேறு நோய் களின் பாதிப்புக்களால் இறப்பார்கள். இந்நோய் காரணமாக அவர்களது ஊட்டச்சத்து,நீர்ச்சத்து.சுகாதாரம், சாதாரண உயிர்வாழ்வதற்கான பொறிமுறைகள்(விழுங்குதல், மலசலம் கழித்தல்) என்பன பாதிப்படைவதால் இவர்கள் இலகுவில் நோய் வாய்ப்படக் கூடியவராக இருப்பர்.

இந்நோயானது விசேட வைத்திய நிபுணரால் (நரம்பியல் நிபுணர்/முதியோர் மனநல வைத்திய நிபுணர்) பரீட்சிக்கப் பட்டு மருந்து வரலாறு (History).ஞாபக சக்தி பரீட்சை (Congitive testing). நரம்பியல் மனோதத்துவ பரீட்சை (Neuro Psychology). இரத்தப்பரிசோதனைகள் ( இவை பொதுவாக நோயாளியைப் பாதிக்கக்கூடிய மற்றைய நோய் களை அடையாளம் காண உதவுகின்றது) பல்வேறு ஸ்கான் பரிசோதனைகள் (CT, MRI, SPECT, PETSCAN) உதவியுடன் இந்நோய் அடையாளம் காணப்படுகின்றது.

இந்நோய் பிடித்தவர்களின் மூளையில் நரம்புக் கலங்கள் (Nerve Cels) படிப்படியாக இறந்து போகின்றன. எனவே மூளையின் அளவு சிறிதாகின்றது. இந்நோயை முற்றாக மாற்றக்கூடிய சிகிச்சை கிடையாது. ஆனால் மூளையிலுள்ள சில இரசாயனப் பொருட்களை அதிகரிப்பதன் மூலம் மூளையின் வினைத்திறனை முடிந்தளவிற்கு அதிகரிக்க மருந்துகள் தற்போது உள்ளன.

இந்த மருந்துகளானது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை முடிந்தளவு உயர்ந்த நிலையில் இறக்கும் வரை பேணுவதாகும். ஆனால் இது எல்லோரிலும் வெற்றிகரமாக வேலை செய்வது கிடையாது. தற்சமயம் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் இந்த நோயை மையமாக வைத்து மேற் கொள்ளப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளில் பமிகவும் செலவு நோய் ஞாபக மறதி நோயாகும். உ-ம் பெருமளவு பணம் பாதிக்கப் பட்டவரைப் பராமரிப்பதற்கு செலவிடப்படுகின்றது. காலப் போக்கில் இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இந்நோயைக் குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக் கூடிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்படலாம் என்று நம்புவோமாக.

இந்நோய்க்கான மருந்துகள்

 1. Acetyll Chaline Esterace Inhibition –
  1. Donepezil
  2. Galamatmin
  3. Rivastigmin
 2.  Memantine நோயின் வளர்ச்சிப் படிகள்
  1. 1வது படி – சாதாரணம்
  2. 2வது படி – மெல்லிய ஞாபக மறதி (Mild Congitive Imperiment)
  3. 3வது படி – ஆரம்ப நிலை அல்செய்மர்ஸ்
  4. 4வது படி – நடுநிலை அல்செய்மர்ஸ்
  5. 5வது படி -நடுநிலை கடுமையான அல்செய்மர்ஸ்
  6. 6வது படி – கடை நிலை அல்செய்மர்ஸ்