மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமா? DrM.அரவிந்தன்

கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் (Metformin) 500 மில்லி கிராமம் மருந்தை கடந்த 5 வருடங்களாக நாளொன்றுக்கு 3 தட வைகள் பயன்படுத்திவருகிறேன். அண்மையில் மேற்கொள்ளப்படகுருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவுநோயானது கட்டுப்பாடில் இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமெனக்கூறு கின்றனர். இது பற்றி விளக்கிக் கூறவும்.

பதில் : இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பாகவுள்ள பிழையான எண்ணக் கருக்களில் இது பிரதானமானதாகும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதற்தர மருந்து மெற்போமின் ஆகும். இந்த மருந்தானது நீரிழிவு நோயைச்சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு அதனால் ஏற்படுகின்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் குறைக்கிறது.

இம்மருந்தானது நீரிழிவு நோய்கட்டுப்பாடின்றிப்போகும்போது ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பை உண்மையில் குறைக்கின்றது. நீரிழிவு நோயாளியொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை குருதிப் பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா இல்லையா எனக் கண்டறியப்படுவது வழமையாகும். இவ்வாறு சிறுநீரகப் பாதிப்பானது குறிப்பிட்ட அளவுக்கு மேலிருக்கும்போதுமாத்திரமே மருத்துவரானவர் மெற்போமின் மருந்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டியேற்படுகிறது. எனவே மெற்போமின் பற்றிய தப்பபிப்பிராயத்தை கைவிடுவது மிகவும் அவசியமானதாகும்.

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,