உணவு உண்பதற்கு சிறந்த வேளை எது?- DR.சி.சிவன்சுதன்

சுகதேகிகளும் நீரிழிவு, இருதய நோய்கள் உள்ளவர்களும் எவ்வாறு தமது உணவு முறைகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பது சம்பந்தமான பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவாக இரவு உணவை குறைத்து காலையும் மதியமும் போதுமான அளவு உண்பது சிறந்தது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இரவு உணவை குறைத்து குடலுக்கும் சுரப்பிகளுக்கும் ஓய்வு கொடுப்போமாக இருந்தால் மறுநாள் அவற்றின் தொழிற்பாடுகள் சிறந்தமுறையில் அமையும். இன்சுலின் சுரப்பின் அளவும் இவ்வாறான உணவுமுறையின் பொழுது அதிகமாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பலர் தமது பிரதான உணவை இரவிலே உண்ணுவது அறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றினால் தொற்றா நோய்களின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளமுடியும்.

DR.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்.