இரத்தக் கசிவினால் ஏற்படும் பாரிசவாதம் – வைத்தியகலாநிதி அஜினி அரசலிங்கம், வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன்

இது மூளையினுள் இரத்தம் கசி வதனால் ஏற்படுகின்றது. மூளைக்கு குருதியை வழங்குகின்ற குருதிக் குழாய்கள் ஒரு தொடர்ச்சியான வலையமைப்பாக பிணைந்துள்ளன. இரத்தக் கசிவானது மூளையின்வெளிப்பகுதியிலோ மூளையின் உட்பகுதியிலோ ஏற்படலாம்.

மூளையினுள் ஏற்படும் இரத்தக் கசிவானது intra cerebral haemorrhage எனப்படும்.மூளையின் வெளிப்பகுதியில் மூளை மென்சவ்வின் கீழ் ஏற்படும் இரத்தக் கசிவானது Subarachnoid Haemorrhage எனப்படும்.

மூளையினுள் ஏற்படும் இரத்தக்கசிவினால் ஏற்படும் பாரிசவாதம் (Intra Cerebral Haemorrhage)

10 வீத பாரிசவாதம் இதனாலேயே ஏற்படுகிறது.

 • குருதியானது உயர்வான அழுத்தத்திலே கசிவடைவதுடன் பாதிப்புக்களை யும் ஏற்படுத்துகின்றது. இதுகுருதிக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதத்தை விட அதிகளவுபாதிப்பை ஏற்படுத்துகின்றது.
 • அறிகுறிகள்
  1.  உடலின் ஒருபகுதி (இடது அல்லது வலது) பலவீனமடைதல் அல்லது உணர்விழத்தல்.
  2. கதைப்பதில் கஷ்டம் ஏற்படுதல். விடயங்களை புரிந்து கொள்வதில் கஷ்டம் ஏற்படுதல்.
  3. தலைசுற்றல்.
  4. பார்வைமங்கலடைதல்
  5. கடுமையானதலைவலி
  6. சுயநினைவிழத்தல், குழப்பநிலை
  7. வாந்தி
  8. கழுத்துப்பிடிப்பு

மூளை மென்சவ்வின் கீழ் குருதி கசிவினால் ஏற்படும் பாரிசவாதம். (Subarachnoid Haemorrhage)

 • மூளையானது 3 மூளையமென் சவ்வுகளால் பாதுகாக்கப்படுகிறது.
 • இரு மென்சவ்வுகளுக்கிடையிலான இடைவெளி (Subarachnoid Space) மூளை முன்னாண் பாய் பொருளி னால் நிரப்பப்பட்டிருக்கும். மூளையின் மேற்பரப்பில் உள்ள குருதிக் குழாய்களில் வெடிப்பு ஏற்படும் போது இப்பகுதியினுள் குருதி கசிவடைகிறது.
 • 5 வீத பாரிசவாதம் இதனாலேயே ஏற்படுகிறது.
 • இது பாரிய மூளைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. கிட்டத்தட்ட 50 வீத மான நோயாளிகளே இத்தாக்கத்தின் பின்னர் பிழைத்துக் கொள்வார்கள்.

* அறிகுறிகள்

 1. திடீரென கடுமையான தலைவலி ஏற்படல். நோயாளி தலையில் சுத்தியல் அல்லது பெரிய பொருள் ஒன்றினால் தலையின் பிடரிப்பகுதியில் அடித்ததைப் போல வலி உணர்ந்ததாக கூறுவர். இது வரைதாம்உணர்ந்ததலைவலியில்இதுவே கடுமையான தலைவலியாக இருக்ககின்றது என உணர்வார்கள்.
 2. சுயநினைவிழத்தல், மாறாட்டநிலை.
 3. வலிப்பு
 4. குமட்டல்
 5. வாந்தி
 6. வெளிச்சத்தை பார்க்கவிரும்பாமை
 7. கழுத்துப்பிடிப்பு
 8. குழப்பமானமனநிலை
 9. காய்ச்சல்
 10. கதைப்பதில் சிரமம்.
 11. உடலின் ஒருபகுதி அங்கங்கள் பலவீமடைதல்.
 • காரனங்கள்
  1. உயர்குருதியமுக்கம்
  2. வயதாவதால்குருதிக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள்.
  3. குருதிக்குழாய்களின் பலவீன மடைந்தபகுதிகளாக குருதிக்குழாய்களின் புடைச்சல் (Aneurysms) காணப்படும். சிலரில் இது பிறப்பிலிருந்தே இருக்கும். சிலரில் உயர்குருதியமுக்கம் காரணமாக ஏற்படுகின்றது. இவ்வாறு நலிவடைந்த புடைச்சல் பகுதிகள் பொதுவாக உயர் குருதியமுக்கம் காரணமாக வெடிப்படைந்து மூளைய மென்சவ்வுகளிற்கிடையில் குருதிக் கசிவினை உண்டுபண்ணுகின்றது.
  4. சிலரில் குருதிக்குழாய்களில் சில அசாதாரணமான குறைபாடுகள் அல்லது மாற்றங்களினாலும் குருதிக்குழாய்களில் வெடிப்புஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்படுகின்றது. இப்பிரச்சினை பொதுவாக பிறப்பிலிருந்தே காணப்படுகிறது.
  5. சில மருந்து வகைகள் அதாவது குருதியின்தடிப்பினை குறைக்க பயன்படுத்தும் மருந்துகள் குருதியுறையாமல் தடுப்பதற்கு வழங்கப்படும் மருந்துகள்.
  6. போதைப்பொருட்களின் பாவனை

குருதிக் கசிவினை கண்டறிதலுக்கு உள்ளபரிசோதனைகள்

1. மூளைக்கதிர்ப்படம் (CT Scan)- இது எல்லாவகையான குருதிக் கசிவினையும் கண்டறியக் கூடியது.
2. நாரிமுள்ளந்தண்டிலிருந்து பாய் பொருளை எடுத்து பரிசோதித்தல் CT படத்திலே குருதிக்கசிவு ஏற்பட்டமை தெரியாமல் இருந்தாலும் நோயாளி மூளை மென் சவ்வுகளிடையில் குருதிகசிந்தமைக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பாராயின் இப்பரிசோதனை செய்யப்படும்.

குருதிக் குழாய்களை பரிசோதித்தல் (Angiogram)

குருதிக் குழாய்களை அசாதாரண மான புடைப்புக்கள் அல்லது வேறு குறை பாடுகளுக்கான பரிசோதனை இரத்தக்கசி வினால் ஏற்படும் பாரிசவாதத்திற்கான சிகிச்சை முறைகள்.

முக்கியமாக ஆரம்ப சிகிச்சைகள் நோயாளியின் முக்கிய உடற்தொழிற்பாடுகளை சீர்படுத்தலிலும் (சுவாசம் இதயத் துடிப்பு, குருதியழுத்தம் என்பவற்றை சரியான அளவில்பேனல்)மற்றும் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதையுமே நோக்கமாகமாக கொண்டவை அவையாவன.

 • குருதியழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.
 • குருதி உறையாமல் தடுப்பதற்கு உபயோகிக்கின்ற மாத்திரைகளை (மருந்துகளை) அளவுக்கதிகமாக உபயோகிப்பதன் விளைவாக குருதிக் கசிவு ஏற்பட்டிருப்பின் அம் மருந்துகளின் தன்மையை குறைக்கக்கூடிய மருந்துகள் வழங்கப்படும்.
 • மூளை மென்சவ்வின்கீழ் குருதி கசிவினால் ஏற்படும் பாரிசவாத்தினை தொடர்ந்து குருதிக்குழாய்களில் ஒருவித சுருக்கம் (spasm) ஏற்படும். அதனை தடுப்பதற்காக சில மருந்து வகைகள் வழங்கப்படும்.
  •  சரியான அளவு வலிநிவாரணிகள் வழங்கப்படும்.
  •  நோயாளி சத்திரசிகிச்சை மூலமான சிகிச்சை முறைக்கு செல்லவேண்டும் எனில் செல்லும் வரை வலிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக வலிப்புமாத் திரைகள் வழங்கப்படும்.

சத்திரசிகிச்சை மூலமான முறைகள்

 1. குருதிக்கசிவு மூளையில் ஏற்படுவதனால் மூளையினுள் அழுத்தம் அதிகரிக்கின்றது. இது மேலும்பாதகமானவிளைவுகளை ஏற்படுத்தும் இவ்வாறான வேளைகளில் மண்டையோட்டின் சிறு பகுதி நரம்பு சத்திரசிகிச்சை நிபுணரால் அகற்றப் படும். இதனால் மண்டையோட்டினுள் அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்படும்.
 2. அசாதாரணமாக குருதிக் குழாய் களில்ஏற்படும்புடைப்புக்களை (Aneurys ms) சத்திரசிகிச்சை சரிப்படுத்தலாம். இது இரண்டு முறைகளில் (Clipping & Coiling) செய்யப்படும். எனினும் அப்புடைப்புக்கள் எந்த பகுதியிலுள்ள குருதிக்குழாய்களில் ஏற்பட்டுள்ளன அவற்றின் அளவு எவ்வாறுள்ளது மற்றும் நோயாளியின் ஏனைய மருத்துவ நிலைகளையும் ஆராய்ந்தே முடிவுசெய்யப்படும்.

இரத்தகசிவின் அளவைப் பொறுத்தும் நோயாளியின் பொதுவான ஆரோக்கிய நிலையைப் பொறுத்துமே பாரிசவாதத்திலிருந்துமீண்டு குணமடைவது தங்கியுள்ளது. சிலர் முழுமையாக குணமடைவார்கள். சிலருக்கு புனர்வாழ்வுகள் தேவைப்படும்

பாரிசவாதத்தினை தொடர்ந்து பாரிசவாத்தின் பின்னர் செய்யவேண்டியவை

 • தொடர்ச்சியாக திடீரெனகடுமையான தலைவலி ஏற்படுமாயின் உடனடி யாக வைத்தியரைநாடவேண்டும்.
 • குருதியமுக்கத்தை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அத்துடன் குருதியழுத்தத்தை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவேண்டும்.
 • உங்கள் வைத்தியரால் வழங்கப் பட்ட மருந்து வகைகளைதவறாது உட் கொள்ளவேண்டும்.
 • தாராளமாக நீர் மற்றும் பானங்கள் அருந்தவேண்டும்.
 • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.
 • புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தல் வேண்டும்.
 • அளவுக்கதிகமாக மதுபானம் அருந்துதல் கூடாது.
 • குருதியில் சீனியின் அளவை ஒழுங்காகபரிசோதிக்கவேண்டும்

வைத்தியகலாநிதி அஜினி அரசலிங்கம்,
வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன்