பாரிசவாதம் ஓர் அறிமுகம் – வைத்திய கலாநிதி அஜினி அரசலிங்கம், வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன்

பாரிசவாதம் எனப்படுவது மூளைக்கு குருதி வழங்கும் குருதிக்கலன்களில்ஏற்படும் அடைப்பு அல்லது வெடிப்பு காரணமாக சடுதியாக ஏற்படும் பாதிப்பு ஆகும்.

இதன் போது மூளைக் கலங்களுக்கான ஒட்சிசன் மற்றும் போசணைக் கூறுகளின் விநியோகம் தடைப்படுகின்றது. இதனால் மூளைக்கலங்கள் இறக்கின்றன. மூளைக் கலங்கள் புத்துயிர்ப்படைய முடியாதவை. எனவே அவற்றின் தொழிற்பாடுகள் இழக்கப் படுகின்றன. இறந்த கலங்களின் தொழிற்பாடுகளை வேறு மூளைக்கலங்கள் பொறுப் பெடுக்கின்றன.

வயது அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் ஆகியவை எமது மக்களிடையேயான பாரிசவாதத்திற்கு வழி வகுக்கின்றன. தற்போது சிலருக்கு இளவயது களிலும் இந்நோயானது ஏற்படுகின்றது.

அனைவரும் பாரிசவாதத்தின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருத்தல் மிக முக்கியமானது.ஏனெனில், அறிகுறிகள் ஏற்பட்ட கணத்தில் இருந்து தாமதிக்கப்படு கின்ற ஒவ்வொரு நிபமிடமும் பமில்லியன் கணக்கான மூளைக்கலங்கள் இறக்கின்றன. அத்தோடு அவற்றினால் ஆற்றப்பட்ட தொழிற்பாடுகள் இழக்கப்படுகின்றன.

அறிகுறிகள்

பாரிசவாதத்தின் அறிகுறிகள் திடீரென்று ஏற்படுகின்றது.அவையாவன.

1. ஒரே பக்கத்துமுகம், கை காலில் பல வீனமோ விறைப்புத்தன்மையோ ஏற்படல்.
2. மனக்குழப்பம் தபங்கலான பேசு அல்லது விளங்கிக் கொள்வதில் உள்ள பிரச்சினை
3.கண்பார்வை முற்றாகவோ பகுதியாகவோ பாதிப்படைதல்
4.கடுமையான தலையிடி FAST எனும் சொல்லின் மூலம் இலகுவாக நினை வில் வைத்திருக்கலாம்.
F-Face drooping – வாய் ஒரு பக்கம் இழுத்தல்
A-Amweaknes – கை சோர்ந்து போதல்
S-Speech difficulty – பேசுவதில் தடங்கல், கடினமான நிலை ஏற்படல்
T-Time to Call for help- ஒருவரிடத்தில் மேற்கூறப்பட்ட அறிகுறிகள் காணப்படுமாயின் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

குருதிக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதம்

பாரிசவாதங்களில் பொதுவான வகை இதுவாகும். குருதியை மூளைக்கு கொண்டு செல்லும் குருதிக்குழாய்கள் அடைபடுவதனால் இது ஏற்படுகிறது.

குருதிக்குழாய்களில் அடைப்பு பின்வரும் காரணங்களினால் ஏற்படுகிறது.

1.கொழுப்புப்படிவு – குருதிக்குழாய்களின் உட்சுவரில் கொழுப்புப்படிவு ஏற்பட்டு ஒரு தழும்பை உருவாக்குகிறது இது Plaquds எனப்படும். இது குருதிக்குழாயை தடிப்படையச் செய்வதுடன் குருதிக்குழாயின் உள்விட்டத்தை குறைத்து விரைவாக குரு திக்குழாய் அடைபடுவதற்கு காரணமாகிறது. இந்த கொழுப்பு படிவுகள் மூளையில் உள்ள குருதிக்குழாய்கள் அல்லது வேறு எங்காவது உள்ள பெரிய குருதிக்குழாய்களில் உருவாக முடியும் அல்லது இந்த கொழுப்பு படிவில் ஒரு பகுதி உடைந்து சென்று மூளைக்கு செல்லும் குருதிக்கலனை அடைப்பதன் மூலம் பாரிசவாதம் ஏற்படுகிறது.

2.சிறிய குருதிக்கலன்களில் ஏற்படும் பிரச்சினை (Small Wessel Disease) – மூளையில் உள்ள சிறிய குருதிக்கலன்கள் அடைக்கப்படுகின்றன. இதனால் படிவுகள் குருதிக்கலன்களில் தேக்கமடைந்து தடிப் படைகின்றன. பின்னர் நாளடைவில் குருதிக் கலன்கள் அடைபடுகின்றன.

3.இதய நோய்கள் -இதயத்தசைத் தொழிற் பாடு பாதிக்கப்படுவதனாலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பினாலும் இரத்தக் கட்டிகள் இதயத்தில் உருவாகின்றன. இதயத்தில் குருதி உறைந்து இரத்தக்கட்டிகள் உருவாகி அதில் ஒரு பகுதி இடம்மாறி குருதிக்குழாய்களூடாக சென்று மூளையில் உள்ள குருதிக் குழாய்களை அடைக்கிறது.

4.இரத்த நாடிகளின் சுவரில் ஏற்படும் கிழிவு மூளைக்கு குருதியை கொண்டு செல்லும் குருதிக்கலன் சுவரில் உள்ள படைகளில் சில வேளைகளில் கிழிவு ஏற்பட்டு குருதி உறைகட்டிகள் (இரத்தக்கட்டிகள்) உருவாகும். இது விபத்துக்களின்போது ஏற்படலாம்.

குருதிக்கலன்கள் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாத நோயை பின்வரு வனவற்றினால் நிர்ணயிக்க முடியும். கண்டுபிடிக்க முடியும்.

*வெளிக்காட்டப்படும் அறிகுறிகள்

மூளை கதிர் படம் (CTscan) இது மூளையில் இரத்தக்கசிவு இல்லை என்பதை உறுதி செய்து சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு உதவும். குருதிக்கலன் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதத்துக்கான மருத்துவ சிகிச்சையானது நோயாளி எவ்வளவு நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதில் தங்கியுள்ளது.

1. இரத்தக்கட்டிகளை கரைத்தல் (Thrombolysis)
பெரிய வைத்தியசாலைகள் குருதிக்கலன் அடைப்பினால் ஏற்படும் பாரிசவாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு இரத்தக்கட்டிகளை கரைக்கும் ஒரு விசேட மருந்து வசதியை கொண்டுள்ளன. Alte plase / rt-PA எனப்படும் இம்மருந்தை கொடுக்கும் சிகிச்சை முறையே Thrombolysis எனப்படும்.

*இம்மருந்தானது முதல்பாரிசவாத அறிகுறி தென்பட்டு நான்கரை மணித்தியாலங்களுக்குள் கொடுக்கப்படவேண்டும். எவ்வளவு விரைவாக கொடுக்கிறோமோ அவ்வளவு சிறந்தது. நேரம் செல்லச் செல்ல அந்த மருந்தின் பயன்படும்தன்மை குறைவடைந்து செல்கிறது. ஆதலால் பாரிசவாத நோயாளியை இயலுமானவரை விரைவாக வைத்திய சாலைக்கு கொண்டு வருதல் வேண்டும்.

குருதிக்கலன் அடைப்பினால் ஏற்படும் பாரி சவாத நோயாளிகள் அனைவரும் Thrombolysis சிகிச்சைக்கு பொருத்தமானவர்கள்அல்ல.

* இம்மருந்தானது பின்வரும் காரணங் களினால் ஒருவருக்கு கொடுக்க முடியாமல் போகலாம்.

 • மூளையில் இரத்தக் கசிவு காணப்பட்டால்
 • அறிகுறிஆரம்பித்தநேரம் தெரியாது இருந்தால்
 • சரியான நேரத்தில் வைத்திய சாலைக்கு வராது விட்டால்
 • ஏதாவது குருதிஉறையா நோய்கள் இருந்தால்
 • அண்மையில் சிறிது காலத்திற்கு முன்பாரிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டி ருந்தால்
 • மூன்றுமாதங்களுக்குள்இன்னொரு பாரிசவாதம் அல்லது தலை காயம் ஏற்பட்டிருந்தால்
 • கட்டியை கரைக்கும் விசேட மருந்துடன்தாக்கத்திலீடுபடும்வேறு மருந்துகளை நோயாளி எடுத்துக் கொண்டி ருந்தால்
 • இந்த விசேட மருந்தினை பெற்றுக்கொள்ளும் 1OO நோயாளிகளில் 7 நோயாளி களுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.

2. ஒரு பாரிசவாத நோயாளி மேற்குறிப்பிட்ட விசேட மருந்தை கொடுப்பதற்கு பொருத்தமற்றவராயின் வேறு மருந்துகள் தொடங்கப்படும். அத்துடன் அவரது மருத்துவநிலைக்கு ஏற்றவாறு மற்றைய மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.

3. மருத்துவ சிகிச்சைக்கு மேலதிகமாக பேச்சு மற்றும் உணவு விழுங்குதல் தொடர்பான பிரச்சினைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். உணவு விழுங்குவதில் பிரச்சினை காணப்பட்டல் மூக்கினுடாக குழாய் செலுத்தி அல்லது வயிற்றில் குழாய் பொருத்தி உணவு ஊட்டப்பட வேண்டும்.

4. சில நோயாளிகளில் மூளையில் பெரிய பகுதி குருதிக்கலன் அடைப்பினால் பாதிக்கப்படுவதனால் மூளை வீக்கமடைகிறது. இவர்கள் Craniectomy எனப்படும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள். இங்கு மண்டையோட்டில் ஒரு பகுதி அகற்றப்பட்டு மூளை மண்டையோட்டினுள் அழுத்தப்படுவதை தவிர்ப்பதன் மூலம் மூளை மேலும் பாதிக்கப்படுவது தடுக்கிறது.

பாரிசவாதத்திற்கு பின்னரான நோயாளியின் பராமரிப்பு

1. 24 மணித்தியாலங்கள் மிகக்கவனமாக கண்காணிக்கப்படவேண்டும்.
2. நோயாளி சாப்பிடுவதற்கு.குடிப்பதற்கு அனுமதிக்க முன்னர் அவரது பேச்சு மற்றும் விழுங்கும் திறன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
3. பாரிசவாதநோயாளியின் பராமரிப்பு குழுவில் உள்ள அங்கத்தவர்கள் மீண்டும் மீண்டும் நோயாளியை மதிப்பீடு செய்ய வேண்டும்.
4. பாரிசவாத நோயினால் ஏற்பட்ட பாதிப்பின் பாரதூரத்தன்மையை அடிப்படையாக கொண்டு நோயாளி நகர்வதற்கான முடிவு எடுக்கப்படவேண்டும்.
5. நோய்க்கு பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகளை தடுப்பதற்கு நோயாளியின் உடல் நிலையை சரியாக பேணுதல் முக்கியமானது.

பாரிசவாதத்தின் விளைவுகள்

 • உடலின் ஒரு பகுதி அல்லது உடலின் ஒரு அரைப்பாகம் செயலிழத்தல் அல்லது பலவீனமடைதல்.
 • தொடர்பாடல். பேச்சு மற்றும் மொழிப் பிரச்சினைகள்.
 • கற்றல், ஞாபக சக்தி மற்றும் சிந்தனையை ஒருமுகப்படுத்தலில் ஏற்படும் பிரச்சினைகள்.
 • பார்வைப்பிரச்சினை.
 • உடல் சமநிலை பேணுதலில் பிரச்சினை.
 • உணவுவிழுங்குதலில் பிரச்சினை
 • சிறுநீர்கழித்தல், மலம்கழித்தல்என் பவற்றை கட்டுப்படுத்துவதில் பிரச் சினைகள்.
 • சோர்வுத்தன்மை.
 • உணர்வு சம்பந்தமான பிரச்சினை

பாரிசவாதத்தினால் ஏற்படும் விளைவுகள் மூளையில் எற்படும் பாரிசவாத நோயின் பாதிப்பின் பாரதூரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பாரிசவாத நோயாளிகளில் சிலர் சிறு விளைவுகளையும் சிலர் கடுமையான நீண்ட நாள்விளைவுகளையும் கொண்டிருக்கலாம்.

வைத்திய கலாநிதி அஜினி அரசலிங்கம்,
வைத்தியர் ஜெயராசா சஞ்ஜெயன்