பாரிசவாதத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

பாரிசவாதமானது வருமுன் காக்கூடிய ஒருநோயாகும். ஆரோக்கியமான வாழ்கைமுறை மற்றும் ஆபத்துக்காரணிகளைக்கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மூலம் இதனைச் செய்யலாம்.

சில காரணிகள் மாற்றியமைக்கக் கூடியவை. சில மாற்றியமைக்க முடியாதவை.

மாற்றியமைக்க் கூடிய ஆபத்துக் காரணிகள்

 • உயர் குருதியமுக்கம்
 • புகையிலை உற்பத்திகளின் உபயோகம்
 • சலரோகம்
 • குருதியில் அதிகரித்த கொழுப்பின் அளவு
 • குறைந்த உடற்தொழிற்பாடு அல்லது அதிகரித்த உடற் பருமன்
 • மூளைக்கு குருதி வழங்கும் நாடியிலுள்ள பிரச்சனை
 • திரன்சியன் ஸ்கீமிக் அற்ராக் (Transient ischaemicattack) குருதிக் குழாயில் ஏற்படும் தற்காலிக அடைப்பு
 • இருதயத்துடிப்பில் உள்ள பிரச்சினை மற்றும் வருத்தங்கள்
 • குருதியுடன் சம்பந்தப்பட்ட சில நோய்கள்
 • அதிகளவான மதுபானப் பாவனை
 • போதை மருந்துகளின் பாவனை

மேற்கூறிய காரணிகளின் மீதான கட்டுப்பாடு பாரிசவாதத்தை வருமுன் காப்பதோடு மீண்டும் வராமலும் தடுக்க உதவும்.