பொதி செய்யப்பட்ட உணவுகள் வாங்க முன்பாக…… மருத்துவர்.பொ.ஜெசிதரன்

எப்பொழுதுமே காலாவதியாகும் திகதியைப் பார்த்துவாங்கவும் உடைந்த கொள்கலன்கள், வீங்கிய பைக்கற்றுக்கள் கசிவுறும் கொள்கலன்கள், உடைக்கப்பட்ட பொதிகள், சரியாக முத்திரையிடப்படாத பொதிகள் புரியாத பாசையிலுள்ள சுட்டுத் துண்டுடனான பைக்கற்றுக்கள் போன்ற வற்றிலுள்ள உணவுகளை வாங்க வேண்டாம். காலாவதியான உணவு நல்ல மணமும் சுவையும் கொண்டிருப்பினும் அவற்றைப் பயன்படுத்திடவேண்டாம். அவை நுண்ணங்கி நோய்க்கிருமித் தொற்றுதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

குளிரில் அல்லது அதீத குளிரில் வைத்திருக்க வேண்டிய உணவு வகைகள் அவ்வாறான நிலையில் பேணப்படாவிடின் அவற்றை வாங்க வேண்டாம். அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்ட
உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும். அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்ட உலர்ந்த உணவுகளை உள்ளங்கையில் கொட்டிப் பின்பு மீளவும் பைக்கற்றினுள் கொட்டிய பின் உள்ளங்கையைப் பார்போமானால் உள்ளங்கையில் பல வர்ண சிறு சிறு கண்ணாடித் துண்டுகள் மாதிரித் தென்பட்டால் அந்த உணவில் அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அஜினமோட்டோ சேர்க்கைகள் புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பானங்கள், பழரசங்கள் வாங்கும் போது நியம நிறக் குறியீட்டையும் பார்த்துவங்கிட மறக்க வேண்டாம் பச்சை நிறக் குறியீடு உள்ளவையே ஆரோக்கியமானவை. அவற்றில் நூறு மில்லி லீற்றரில் (100 மில்லி லீற்றர்) 2கிராமுக்குக் குறைவான சீனியே சேர்க்கப்பட்டுள்ளது மஞ்சள் சிவப்பு நிறக்குறியீடுகள் பொறித்த பானங்களைத் தவிர்த்தல் நன்று.

மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி,