விஞ்ஞான மற்றும் மருத்துவத் துறையில் வளர்ச்சி பெற்ற வேறு கிரகங்கள் இருக்கிறதா? – Dr.சி.சிவன்சுதன்

பூமியிலே மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

எம்மிலும் ஆற்றல் மிக்க உயிரினங்களைக் கொண்ட வேறு கிரகங்கள் இருக்கின்றனவா? அவற்றுடன் எமது அறிவுகளை பகிர்ந்து கொள்ளும் காலம் ஒன்று உருவாகுமா? என்று எல்லாம் சிந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

பல ஒளியாண்டுகள் தொலைவில் பூமியை ஒத்த 8 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நாசா நிறுவனத்தின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிரகங்கள் பூமியை போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும் நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விடயங்களைக் கொண்டிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்ப நிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இவற்றில் முன்னேற்றகரமான உயிரினங்கள் வாழக்கூடும்.அவற்றுடன் தொடர்புளை ஏற்படுத்தும் வகையில் எமது தொழில் நுட்ப அறிவும் வளர முடியும்.

ஆனால் இந்த கிரகங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்