செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள். இனங்காண்பது இலகு

செயற்கையாக மருந்து விசிறிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை இனங்காண்பது இலகு. பழக்காம்பானது முதிர்ச்சியடையாது இளமையாகக் காணப்படும் தோல் திட்டுத் திட்டாகப்பழுத்துக்காணப்படும் அவை சுவையற்றவையாக இருக்கும். ஈ எறும்பு தேனீபோன்றவை இந்தப்பழங்களை நோக்கி கவரப்படா நீண்ட காலம் அழுகலடையாது காணப்படும்.

பழங்களை வெட்டும் போது அவற்றின் விதைகளும் இலகுவில் வெட்டப்படக்கூடியதாக இருக்கும். இயற்கையாகப்பழுக்கும் செயன்முறையானது அடிப்பகுதியிலிருந்து நுனியை நோக்கியதாகவும் விதைப் பகுதியிலிருந்து தோலைநோக்கியதாகவும் இருக்கும். ஆனால் செயற்கையாகப்பழுக்கவைக்கப்பட்டவற்றில் தோலிருந்து விதை நோக்கியதாக இந்தச் செயன்முறை காணப்படும். பழங்களை வெட்டிப் பார்ப்பதன் மூலமே இதனை அறிந்து கொள்ள முடியும்.

நாங்கள் பழங்கள் வாங்கும் வியாபாரி செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டடு மருந்து விசிறி பழங்களை விற்பதனை உணர்ந்து கொண்டால் அதனை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நான் இனிமேல் உங்களிடம் பழங்கள் வாங்கப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் என்னை ஏமாற்றுகின்றீர்கள் என்று நாம் ஒவ்வொருவரும் கூறுவோமெனில் வியாபாரி தன்செயன்முறையை கொள்வனவு முறையை மாற்றமுயல்வார்.

எங்கள்விடுகளுக்கு அண்மையாகவுள்ள நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்கி வருவோமானாலும் இயற்கையாகப் பழுத்த பழங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி,