மூன்றில் ஒருபங்கு புற்றுநோய்கள் தடுக்கப்படக்கூடியவை – வைத்தியர்.சி.சிவன்சுதன்

வேகமாக அதிகரித்துவரும் புற்றுநோய் ஒரு பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது இது சம்பந்தமாக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளை மிகப் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

சில செல்கள் மட்டும் திடீரென புற்று நோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்பது இவர்களின் ஆய்வின் மையப் பொருள்.

தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல், சுற்றாடல் மாசடைதல் போன்ற காரணங்களால் புற்றுநோய் தோன்றும் வீதம் அதிகரித்திருப்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடிப்பது. உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டு வகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதன் மூலம் புற்றோயினால் ஏற்படும் தாக்கங்களை பெருமளவு குறைத்துக் கொள்ளமுடியும்.

வைத்தியர்.சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்