எனது மகனின் வயது 6 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்புநிறமான படை போன்று இருக்கிறது???

கேள்வி: எனது மகனின் வயது 6 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்புநிறமான படை போன்று இருக்கிறது எனக்கும் கணவருக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது எனது மகனின் நிலை தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?

பதில்: கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறமான படையானது காணப்படுவதை Acanthosis nigricans என்று கூறுவார்கள். இது உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்பு நிலை (nsulin resistance) ஏற்படுவதன் அறிகுறியாகும் தவறான உணவு மற்றும் அப்பியாசமற்ற வாழ்க்கைமுறை என்பவற்றால் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும்போது இவ்வாறான நிலமை ஏற்படுகிறது. இவ்வாறானவர்களுக்கு நீரிழிவுநோய் மற்றும்மெட்டாபோலிக்சின்ட்ரோம் (Metabolic Syndrome) எனப்படுகின்ற நோய்நிலமையும் ஏற்பட நேரிடுகிறது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது அவர்களின் குழந்தைக்கு அந்தநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, உங்கள் மகனானவர் இன்று முதல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை மேற் கொண்டு உடற்பருமனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதைவிடவைத்திய ஆலோசனையைப்பெற்று மேலதிக பரிசோதனைகளை(குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு குருதி அமுக்கம் கொழுப்பின் அளவு ஹோர்மோன்கள்) மேற்கொள்வதும் அவசியமானதாகும்.

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,