எனக்கு ஒரு வைத்தியர் நீரிழிவு இல்லை எனவும் இன்னொரு வைத்தியர் நீரிழிவு முன்நிலை (prediabetic) எனவும் கூறினர்???

நான் 32 வயதுடைய பெண் எனது நிறை 75Kg உயரம் 157cm எனக்கு முடி உதிர்தல் பிரச்சினைக்காக வைத்தியரிடம் ஆலோசனை பெற்ற போது FBS -101.9 mg/dl ஆக இருந்தது. அதனை ஒரு வைத்தியர் நீரிழிவு இல்லை எனவும் இன்னொரு வைத்தியர் நீரிழிவு முன்நிலை (prediabetic) எனவும் கூறினர். நீரிழிவு தொடர்பான எனது உடல் நிலையைத் தெளிவு படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்களது உடற்திணிவு சுட்டி 30.42 Kgm-2 . சாதாரணமான உடற்திணிவு சுட்டி 18-23Kgm-2) என்பதால் உங்களது உடல்நிறையை நியம மட்டத்தில் பேணுவது அவசியமானதாகும். இரு வைத்தியர்களும் சரியாகத்தான் கூறியிருக்கிறார்கள் Prediabetic முன்நிலை என்பது FBS பெறுமானம் 100 -126 mg/dl இருக்கும் நிலையாகும். நீங்கள் உங்களது உடல்நிறையை நியமமட்டத்தில் பேணுவதனூடாக அதாவது உணவுக்கட்டுப்பாடு போதிய உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதையும் நீரிழிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தாமதிக்க முடியும். நீங்கள் பேண வேண்டிய உடல் நிறை 56Kg களிலும் குறைவாக ஆகும்.