விற்றமின் D பற்றாக்குறை பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது! – Dr.சி.சிவன்சுதன்

இலங்கையில் பலருக்கு களைப் புத்தன்மைக்கும் மூட்டு எலும்பு நோவுகளுக்கும் காரணமாக விற்றபமின் D குறைபாடு இருப்பது கண்டறியப் பட்டுவருகின்றது.

எமது உடலிலே நேரடி சூரிய ஒளி படாமல் இருப்பதும் பால், முட்டை போன்ற விற்றபமின் D அதிகமுள்ள உணவு வகைகளை போதியளவு எடுக்காமல் விடுவதுமே இதற்கு முக்கியமான காரணிகளாக அமைகின்றன.

காலை 9.30 மணிக்கு பின் நேரடி சூரிய ஒளி எமது உடலில் படுமாயின் உடல் விற்றமின் D யை தானாக தொகுத்துக் கொள்ளும் வல்லமை எமது தோலுக்கு உண்டு.

வெயிலில் நின்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. இந்த நிலை ஏற்பட்டு வருவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.

மண்ணிற அல்லது கறுப்பு தோல் உள்ளவர்களுக்கு வெள்ளைத் தோல் உள்ளவர்களிலும் பார்க்க விற்றபமின் D யை தொகுத்துக்கொள்ளும்வல்லமை குறைவாகக் காணப்படுகிறது.

எமக்கு இவ்வகையான தோலே காணப்படுவதால் நாம் கூடியளவு நேரம் சூரிய ஒளியில் உலவுவது பயனுடையதாக அமையும். விற்றபமின் D குறைபாட்டினால் களைப்பு, ஊக்மின்மை, எலும்பு மற்றும் மூட்டுநோக்கள், தசைப் பல வீனம், தலையிடி, தலைமுடி உதிர்வு, எலும்பு விருத்தி அடைவதில் பாதிப்பு போன்ற பல சுகாதாரப் பிரச்சினைகள் தோன்றலாம்.

விற்றமின் D பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிலை உள்ளவர்கள் 7OO-8OO IU விற்றமின் D ஐ தினமும் உள்ளெடுப்பது நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விற்றமின் D குறைபாடு உள்ளவர்கள் 5O, OOO IU விற்றமின் Dஐ வாரம் ஒரு தடவை என்ற வீதத்தில் 8 வாரங்களுக்கு வாய் மூலம் உள்ளெடுத்த பின்பு தினமும் 8OO IU விற்றமின் Dயை தினமும் எடுத்து வருவது விற்றமின் D குறைபாட்டினால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க உதவும்.

மீன், மீன் எண்ணெய், பால் முட்டை, காளான், ஈரல் போன்ற உணவுகளில் விற்றபமின் D அதிகம் காணப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக நாம் வெயிலில் நடமாடும் பொழுது எமது தோலில் நேரடி சூரியஒளி படும் சந்தர்ப்பத்தில் எமது தோல் சூரிய விற்றமின் D யை தானாகவே தொகுத்துக்கொள்ளும். இதற்காகவே எமது முன்னோர்கள் ஒழுங்கான கசூரியநமஸ்காரம் செய்து வந்தார்கள்.

நமக்கு விற்றமின் D குறைபாடு இருக்கக்கூடும் என்ற சந்தேகமுள்ளவர்கள் குருதியில் விற்றபமின் Dயின் அளவை சோதித்து அறிந்து கொள்ள முடியும்.

விற்றபமின் D குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் அது ஏற்பட்டால் அதனை கண்டறிந்து அதை நிவர்த்திசெய்யும் நடவடிக்கைளிலும் ஈடுபடுவது அவசியம்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுனர்