பாடசாலைகளை சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புக்களாக மாற்ற சுகாதாரக் கழகங்கள்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுகாதாரத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அவற்றை அவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தம்செயற்பாடுகள்மூலம் அறிந்து கொள்வதற்குமாகவும் பாடசாலை சுகாதாரக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களின் சுகாதார நன்னிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் இந்தக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் ஏற்கனவே இருக்குமாயின் அதனை உயிர்ப்பாக்கி அதன் செயல்வீச்சை அதிகரித்திடல் வேண்டும்.

பாடசாலைகளை சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புக்களாக மாற்றுவதில் இந்தக் கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இந்தக்கழகம் செவ்வனே இயங்குவதை பாடசாலை அதிபர் கண்காணித்து அதன் செயற்பாட்டை ஊக்குவித்தல் நன்று.

இதன்மூலம் அந்தப்பாடசாலையானது மாணவரினதும் அவர் குடும்பத்தினதும் சுகாதார வாழ்வியல்மேன்னிலையை உயர்த்துவதில் பங்களிப்பு செய்திட முடியும். இது எதிர்காலத்தில் சமூகத்தின் உடல், உள, சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயம்மில்லை.

மாணவர்கள்தம் சொந்த ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளைக் கட்டுப் படுத்தக் கூடியவர்களாகவும், ஆரோக் கியத்தை மேம்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கும் திறனை வளர்த்துக கொள்ளவும் இந்தக் கழகம் உதவிடும். மனிதவாழ்க்கைமுறை மாற்றம், சூழல் நேயமற்ற செயற்பாடுகளால் ஏற்படும் தொற்றும் தொற்றா நோய்களின் தாக்கங்கள்பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி குடும்பத்தினருக்குள்ளும் சமுதாயத்தினருக்குள்ளும் சுகாதாரத்தைமேம்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தும் கருவிகளாகச் செயற்படுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு இந்தக்கழகம் அதிகாரமளிக்கிறது என்றால் அது மிகையல்ல.

மாணவர்கள் மத்தியில்போஷாக்கு நிலையை முன்னேற்றுதலுக்கும் நல்ல சுகாதார நடைமுறைகளை ஊக்கப்படுத்துவதற்கும் வாழ்க்கைத்திறன் தேர்ச்சிகளை பெற்றுக் கொள்வதற்கான அறிவு உளப்பாங்கு மற்றும் செயற்திறன்களை உருவாக்குவதற்கும் இந்தக் கழகம் உதவுகின்றது.

கழகத்தின் பொறுப்பாசிரியர்கள் தமது ஆக்கபூர்வமான சிந்தனைகள் Creative idease மூலம் மாணவர்களின் சுகாதார அறிவு வீச்சை உயர்த்துவதோடு பாடசாலையின் ஏனைய மாணவர்கள் மத்தியில் இந்த எண்ணக் கருத்துக்களை விதைத்திட தகுந்த நடவடிக்கைகளை எடுத்தல் சிறப்பானதாக இருக்கும்.

இது இன்றைய மாணவர்கள் எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்க்கும். எனவே இந்தக் கழகங்களை சிறப்பாக செயற்படுத்தி எதிர் கால சமூக நன்னிலையை பேணிட முடியும்.

கழகத்தின் வருடாந்த செயற்திட்டங்களை ஒழுங்குபடுத்தி நிறைவேற்றுதல் முக்கியமானதொன்றாகும். மாதாந்தக் கூட்டங்களைத் தவறாது நிகழ்த்துதல் மூலம் திட்டங்களை செயற்படுத்துவது இலகுவாக அமையும் பாடசாலை சுகா தாரக் கழகங்களினால் மேற்கொள்ளப்படக் கூடிய செயற்பாடுகளாவன:

விசேடதினங்களில் அதாவது உலக புகைத்தலுக்கு எதிரான தினம், போசணை மாதம், உலக விலங்கு விசர் நோய்த்தினம், சர்வதேச உள நாள் கை கழுவும் தினம், சர்வதேச சிறுவர்தினம் விபத்துத்தடுப்புதினம் சர்வதேச AIDS தடுப்புதினம், மார்பக புற்று நோய்விழிப்புணர்வுமாதம் போன்ற தினங்களில், விருந்தினர் உரை குழுக் கலந்துரையாடல்கள் உரையாடல்கள்,நாடகங்கள் விழிப்புணர்வு ஒளிக்காட்சிகள், பாத்திர மேற்று நடித்தல் போன்ற நிகழ்வுகளை நடாத்துதல். 0
ஒலிபெருக்கி வசதியுள்ள பாடசாலைகளில்தினமும்ஒருசுகாதார உரையை நிகழ்த்துதல், மாணவர்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய உடல், உள, சூழல் சார் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் சிறப்பாகும்.
சுகாதாரம் தொடர்பான போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துதல், மாணவர்கள் தம் திறமைகளை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தும்முகமாகநாடக, ஓவிய, உரை விவாதப் போட்டிகளாக ஒழுங்கு படுத்துதல் சிறப்பாகும்.
தினமும் ஒரு சுகாதாரத் துணுக்கை கரும்பலகையில் எழுதிக் காட்சிப் படுத்துதல் சுவர் செய்தித்தாள்” கலாசாரத்தை மீள அறிமுகம் செய்தல்
பாடசாலை உணவகத்தில் ஆரோக் கியமான உணவு வழங்கலை ஏற்படுத்த உதவுதல். இந்தக் கழகமானது உணவகத்தை கண்காணித்து அதிபருக்கு அறிக்கை அளித்து ஆரோக்கிய உணவுண்ணும் கலாசாரத்தை தோற்றுவித்தல் பாட சாலை உணவகத்தில் இருக்கக் கூடாத ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் பட்டியலை உணவகத்தில் காட்சிப்படுத்தல், ஆரோக்கிய உணவை தெரிவு செய்வதற்காக போக்குவரத்து சமிக்ஞை விளக்கு” வர்ண சுவரொட்டியைதயார் செய்து காட்சிப்படுத்துதல்.
சுகாதாரத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவும் சுகாதார வளமையத்தை Resource Center உருவாக்குதல், இங்கு துண்டுப் பிரசுரங்கள், வீடியோ, சுவரொட்டிகள், செய்தித்தாள்கள் கட்டுரைகள் ஆகியவற்றைச்சேகரித்து பாவிக்கும் நிலையில் பேணுதல்
பாடசாலை சுகாதாரதினத்தில்நடை பெறும் பாடசாலை மருத்துவ பரிசோதனையில் உதவுதல். உதாரணமாக மாணவர்களை ஒழுங்குபடுத்துதல், இனங்காணப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிதல், அவற்றுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல்.
சுகாதார செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மாணவர்களை வலுவூட்டுதல், தத்தமது உடல்திணிவுச்சுட்டியை அளவிட்டு அதனைச்சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சுயமாக ஈடுபடுதல், தமது பார்வைக் கூர்மையை தாமாகவே பரிசோதித்தல், தமது ஆகாரத்தின் போசணையை மதிப்பிடல், தமது உடற்தகைமையை அளவிடல்
வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட் டங்களை மேற்கொள்ளல். இது மாணவர்கள் மத்தியில் ஆச்சரிய மிகு மாறுதல்களை தோற்றுவிக்கும். மன எழுச்சிகளை எதிர்கொள்ளல், தன்னை புரிந்து கொள்ளல், பயன்மிகு ஆளிடைத்தொடர்புகள் ஆக்கபூர்வமான சிந்தனை,பகுத்தறிவுச்சிந்தனை, தீர்மானம்செய்தல், பிரச்சினைகளைத்தீர்த்தல் என பல ஆரோக்கியமான திறன்களை வளர்க்கும். இதன்மூலம் பாடசாலையின் முரண்பாடுகள், வன்முறை, துஷ்பிரயோகம், பாதுகாப்பற்ற பாலியல்நடத்தைகள் ஆகியவற்றை முடிந்தவரை குறைத்திட முடியும், மாணவர்கள் ஒரு நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் குழுவாக வேலை செய்யும் தன்மையை ஏற்படுத்தும்.
பாடசாலை சுற்றாடலை சுத்தமாகப் பேணுதல், திண்மக் கழிவுகளை கழிவுத்தொட்டிகளில் வழிப்படுத்தல், கழிவுகளை வகைபிரித்து மீள்சுழற்சிக்கு உதவுதல் கழிவுகளை வகை பிரித்து சேமிக்கும் நிற நியமக் குறியீட்டைக் காட்சிப்படுத்தல்.
நுளம்பினால் பரவும் டெங்குநோயை கட்டுப்படுத்த உதவுதல், இதற்காக விழிப்புணர்வு செய்தல், பாடசாலை சுற்றாடலை வாரத்துக்கு ஒருமுறை பரிசோதித்து நுளம்புக்குடம்பிகள் மற்றும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இல்லாதிருப்பதை உறுதி செய்தல் பாடசாலைச்சுற்றாடலை ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதாகவும் விருத்தி செய்ய உதவுதல்.
நீர்மாசடைதலை தவிர்த்தல் மற்றும் மலசலகூடங்களைத் துப்புரவாக பேணுவதன் அவசியத்தை உணர்த்துதல்.
சுகாதாரப்பிரச்சினைகள் உள்ள மாணவர்களை தொடர்ந்தும் கண்காணித்தல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கஉதவுதல்.
ஆரோக்கியமான சுகாதாரப் பழக்க வழக்கங்களைக்கைக்கொள்வதற்கு பாடசாலைச் சமூகத்தினரை ஊக்கப்படுத்தல், தொடர்ந்தும் முயற்சித்தல்
வாகன விபத்துத் தடுப்பு விழிப்பு ணர்வு முதலுதவி வழங்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் பேணுதலும் முடியுமாயின் முதலுதவிமையங்களை உருவாக்குதலும்

இங்கு குறிப்பிட்ட செயற்பாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள மாணவர்களை வழிப்படுத்தினால் அது
அந்தக் கழகத் தின் வெற்றி மட்டுமல்ல அந்தப் பாட சாலையின் சாதனையாகவே பார்க்கப்படும்.

மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி