கவலை மற்றும் மன அழுத்தத்தால் புற்று நோய் ஆபத்து

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிக பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்களால் ஏற்படும் உயிர் ஆபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
குடல், விந்துப்பை , கணையம் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய் ஆபத்து இவர்களுக்கு அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்த ஒரு திட்டவட்டமான காரண இணைப்பை உருவாக்க மேலும் அதிக ஆய்வு பணி தேவைப்படுகிறது என பிஎம்ஜே என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்