விற்றமின் C

விற்றமின் C ஆனது இழையங்கள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட உங்களுடைய உடம்பின் எல்லா பாகங்களினதும் வளர்ச்சிக்கும் மற்றும் மென்சவ்வுகளைப் புதுப்பித்தலுக்கும் தேவைப்படுகின்றது.

காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்முறையின் தொழிற்பாட்டிற்கும் விற்றமின் C அத்தியாவசியமானதாகும். விற்றமின் C ஆனது விசேடமாக புதிய மற்றும் பச்சையான காய்கறிகளையும்ப ழங்களையும் உட்கொள்கின்றமையால் உடனடியாக கிடைக்கக்கூடியதாக உள்ளன.

சமைக்கின்றபோதும் செயல் முறைக்குட்படுத்தப்படுகின்ற போதும் விற்றமின் C ஆனது அழிக்கப்படுகின்றது. பிரதான உணவுக்குப் பின்னர் புளிப்பான பழங்களை உட்கொள்வதன் மூலமும் பச்சை இலை வறுவல்களுக்கு எலுமிச்சை பழச்சாற்றினை சேர்ப்பதன் மூலமும் விற்றமின் C யைபெற்று, இரும்பு அகத்துறிஞ்சலை அதிகரித்துக் கொள்ளலாம்.

விற்றமின் C அடங்கிய உணவுகளாவன
பழங்கள்

நெல்லி, கொய்யா, மரமுந்திரிகைப் பழம் (கஜூ), நட்சத்திரப்பழம் புளிப்பானபழங்கள்,(தோடை, எலுமிச்சை), பப்பாசிப்பழம், அன்னாசிப்பழம்.

கடும் பச்சைநிற இலை காய்கறிகளும் ஏனைய காய்கறிகளும்

முருங்கை இலை, அகத்தி இலை, வல்லாரை, கங்குன், முள்ளங்கி இலை,பீட்ரூட் இலை, முருங்கைக் காய், கறிமிளகாய், தக்காளி.

உண்ணக் கூடிய நார்பொருட்கள்

பழங்களிலும் காய்கறிகளிலும் உள்ள நார்பொருட்கள் குடலின் அசைவினை ஒழுங்காக்குவதற்கு உதவுகின்றன. அவவாறே, மலச்சிக்கல், எரிச்சல் ஏற்படக் கூடிய அரிப்புடனான குடல் அறிகுறிகள் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றை தடுக்கின்றன. நார்ப்பொருட்கள் உணவுகளின் நச்சுத்தன்மையை மறைமுகமாக அகற்றுகின்றன. மற்றும் கொலஸ்டரோலின் அகத்துறிசலையும் குறைக்கின்றன.

சந்தைகளிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பிற்சேர்க்கையான நார்ப்பொருட்களை விட உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் நார்ப்பொருட்கள் சிறந்தவை ஆகும்.

நார்ப்பொருட்கள் அடங்கிய உணவுகளாவன
தானியங்கள்

புலுங்கல் அரிசி, மண்ணிற அரிசி, குரக்கன், சோளம் மற்றும் முழுமணித்தானியங்கள்.

பழங்கள்
பசன் புரூட் (Passion Fruit), விளாம்பழம், கொய்யாப்பழம், வில்வம்பழம், பப்பாசிப்பழம், தோலுடனான அப்பிள்
மற்றும் பெரிப்பழம் (Pears), தோடம்பழம், உலர்ந்தபழங்களான பேரீச்சம்பழம், புரூன்ஸ் (Purnes), உலர்ந்த திராட்சை.

காய்கறிகள்

அவித்தகரட், வெண்டிக்காய், பாவற்காய், பலாக்காய், கோகிலை புடலங்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோவா (Broccoli), பசளி இலை.

பருப்புக்கள்

காய்ந்தபட்டாணி, கடலை, கௌபி,பயறு, அவரைவிதைககள்,கொட்டைகளும் விதைகளும், பட்டாணி கொட்டைகள், துருவிய தேங்காய், பூசணிக்காய் விதைகள்.