ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள்

ஆரோக்கியமற்ற சிற்றுண்டி வகைகளை உண்பதனால் எமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை நாம் தயாரித்து உண்ணுதல் சாலச்சிறந்தது. அந்த வகையில் ஆரோக்கிய மான சில சிற்றுண்டி வகைகளாவன,

 • பழங்கள், உடனடிப் பழச்சாறு
 • யோகட் , தயிர்
 • அவித்த சோளம்
 • அவித்து பதப்படுத்தப்பட்ட பருப்பு வகைகள், பாசிப்பயறு, கௌப்பி
 • எள்ளு, மரமுந்திரிகை விதை (கஜூ), நிலக்கடலை அல்லது ஏனைய ஆரோக்கியமான விதைகள்
 • அவித்த மரவள்ளி, பனங்கிழங்கு, புழுக்கொடியல் மா, வத்தாளை அல்லது ஏனைய கிழங்குகள்.
 • சவ்வரிசி, களி, பயிற்றம் உருண்டை மற்றும் தானியங்களினால் வீடுகளில் தயாரிக்கின்ற உற்பத்திகள் வடை போன்றவை.
 •  பயிற்றம் உருண்டை -இனிப்பூட்டி சேர்க்கப்பட்டது.


குழந்தைகளுக்குரிய சரியானதும் மேலதிக உணவு ஊட்டலுக்குமான வழிகாட்டி

 • மிகவும் ஆரம்பத்திலிருந்து அரைத்திண்ம நிலையில் உள்ள உணவுகளை அவர்களுக்கு ஊட்டவும்
 • சரியான அடர்த்தியையும் சுவை யையும் பெற்றுக் கொள்வதற்கு சிறிதளவிலான தாய்ப்பாலைச் சேருங்கள்.
 • குழந்தைகளுக்கு பசி வரும் வரை காத்திருந்து உணவூட்டல் வேண்டும்.
 •  குழந்தைகள் நித்திரை கொள்வதற்கு முன்னர் ஊட்டுங்கள்.
 • பல வகையான உணவு வகைளைக் கொடுங்கள்.
 • சுகவீனமுற்றிருக்கும் போது உணவுகளைக் குறைக்க வேண்டாம்.
 • குழந்தைகள் சுகவீனமுற்றிருக்கும் காலத்தில் ஆரோக்கியத்திற்கு அதிக உணவுகள் தேவை.
 • உணவுகளைத் தயாரிப்பதற்கும் ஊட்டுவதற்கும் முன்னர் எல்லாப் பாத்திரங்களையும் கைகளையும் கழுவுதல் அவசியம்.
 • மேலதிக உணவுகளைத் தயாரிப்பதில் பல வகையாக உணவுகளைத் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • 8-9 ஆம் மாதங்களில் சுயமாக சாப்பிடுவதற்கு அவர்களை தயார்படுத்துங்கள்.