ஆரோக்கிய உடற் செயற்பாடுகளுக்கான பொதுவான வழிகாட்டிகள்

  • கிழமையின் அநேகநாட்களில், ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
  • அவசியம் ஏற்படுமிடத்து நாளாந்தம் 30 நிமிடம் செய்யும் உடற்செயற்பாடுகளை  குறுகிய காலங்களுக்கு உடைக்கப்படலாம்.
    (உ-ம்) 3 சுறுசுறுப்பான நடைகள் அல்லது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு மிதி வண்டி ஓட்டுதல்.
  • அநேகமான நாளாந்த உடற்செயற்பாடுகள், ஒட்சிசனை உள்ளெடுத்துக் கொள்ள உதவும் உடற்பயிற்சிகளாக இருக்க வேண்டும். (உ-ம்) நடத்தல், ஓடுதல், மெதுவாக நடத்தல், வீட்டுவேலைகள் போன்றவை).
  • பலம் பொருந்திய கடுமையான செயற்பாடுகளை கிழமைக்கு 3 தடவைகள் செய்தல் வேண்டும். இவற்றை உள்ளடக்குவதனால் தசைகள் மற்றும் எலும்புகள் போன்றன பலப்படுத்தப்படுகின்றன.
  •  குழு விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த ஊக்குவிக்கப்படுகின்றது.
  • ஒவ்வொரு தனிநபர்களினதும் உடல் கூறுகளைப் பொறுத்து உடற்தொழிற்பாடுகள் செய்யவேண்டியகால அளவும் வேறுபடும்.