ஈரலில் கொழுப்புப் படிவு (Fatty Liver) – Dr.சி.சிவன்சுதன்

ஈரலில் கொழுப்பு படிவு நிலையினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ஒரு சுகாதார பிரச்சினையாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்காதவிடத்து ஈரல் பாதிப்புநிலை மட்டுமல்ல இருதயம் இரத்தக்குழாய்கள் சம்பந்தமான பாதிப்புக்களும் ஏற்படக் கூடும்.

இந்த நிலை பொதுவாக போதிய உடற்பயிற்சி இன்மை‚ உடல் நிறை அதிகரிப்பு‚ குடிவகை பாவனை‚ ஆரோக்கியமற்ற உணவுப் பாவனை போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது.

இந்த நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஒழுங்கான உடற்பயிற்சி‚ உணவிலே அதிகளவு இலைவகைகளையும் நார்த்தன்மையான உணவுகளையும் சேர்த்தல்‚குடி வகைகள்‚ சோடாவகைகளை தவிர்த்தல்‚ உடல் நிறையை சரியான அளவில் பேணுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

ஈரல் கொழுப்பு படிவு நிலையினால் பாதிக்கப்பட்டவர்களும் மேற்கூறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நிலையில் இருந்து குணப்படமுடியும்.

இந்த நிலையை குணப்படுத்துவதற்கு என்று மாத்திரைகள் எவையும் கண்டறியப்படவில்லை.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.