சோம்பல்தன்மை தைரொயிட் தொடர்பான பிரச்சினையாக இருக்கக்கூடுமா?

கேள்வி – எனது வயது 25 ஆகும். எனக்கு சிலமாதங்களாகக் கழுத்துப்பகுதியில் வீக்கமொன்று காணப்படுகின்றது. நான் சோம்பல்தன்மை க இருப்பதாக உணர்வதோடு எனது உடல் நிறை அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்கிறேன். என்து மாதவிடாய் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது. இது தைரொயிட் தொடர்பான பிரச்சினையாக இருக்கக்கூடுமா?

பதில்- உங்களுக்கு இருக்கின்ற குணங்குறிகளைப் பார்க்கும் போது தைரொயிட் சுரப்பி குறைவாகச்சுரக்கின்ற நோய் இருப்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாக உள்ளது. தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரக்கும் போது சோம்பல் தன்மை நித்திரைத் தூக்கம் உடல்நிறை அதிகரித்தல், மலச்சிக்கல் தலைமுடிஉதிருதல் குளிர்தாங்க முடியாத தன்மை குரல் மாற்றமேற்படுதல் மற்றும் பெண்களில் மாதவிடாய் வெளியேற்றம் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். தைரொயிட் ஹோர்மோனின் அளவை குருதிப்பரிசோதனை மூலம் அளவிட்டுக் கொள்ள முடியும் இந்தப் பெறுபேற்றின் அடிப்படையில் தைரொக்ஸின் மருந்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். தைரொக்சின் மருந்தானது (குளிசை) காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுக்கப்படவேண்டும். இதன் பின்னர் 30 நிமிடங்களுக்குப் பின்னரே தேநீர் போன்ற பானங்களை அல்லது காலை உணவை உள்ளெடுக்க வேண்டும். தைரொக்ஸின் குளிசையுடன் வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் உள்ளெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் அவ்வாறான மருந்துகளைக் காலை உணவின்பின்னர் உள்ளெடுத்தல் சிறந்தது தைரொயிட்ட ஹோர்மோனின் அளவைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதித்து தைரொக்ஸின் குளிசையின் அளவை மாற்ற வேண்டியிருக்கும் உங்களுக்கு கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படுவதால் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும் காப்பம் தரிக்க விரும்பும் பெண்களில் தைரொக்ஸின் ஹோர்மோனின் அளவானது குறிப்பிடத்தக்க அளவில் பேணப்படுவது அவசியமாகும். கர்ப்பம் தரித்தபின்னர் குறிப்பிடத்தக்க அளவில் தைரெக்ஸின் மருந்தை உள்ளெடுக்காதுவிடின் கர்ப்பத்திலுள்ளா சிசுவின் உடல்,மூளை வளர்ச்சி போன்ற பாதிப்படைய நேரிடுவதோடு கருச்சிதைவு ஏற்படும் சாத்தியக் கூறும் அதிகமாகும். எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,