அன்னாசியை உண்டு பயன்பெறுவோம். பு.ஷாலினி

நாவுக்கினிய சுவைகொண்டதும், பார்க்கும்போதே உண்ணக்கூடிய விருப்பைக் கூட்டும் பழம் அண்ணாசி, மிகவும் குறைந்த கலோரிப் பெறுமானத்தைக் கொண்டிருப்பதுடன் அதிக நார்ச்சத்தையும் இது கொண்டுள்ளது. ஒழுங்கான குடற் செயற்பாட்டுக்கும், கழிவுப் பொருள்கள், நச்சுப் பொருள்கள் என்பனவற்றின் வெளியேற்றத்திற்கும் இது உதவுகின்றது.

அதேவேளை, கொலஸ்ரோல் அகத்துறிஞ்சலையும் குறைக்கின்றது. அதீத நிறை உடையவர்களும், நீரிழிவு நோயாளர்களும் அன்னாசிப்பழத்தை வேண்டியளவு உட்கொள்ளமுடியும்.

100கிராம் அன்னாசிப் பழத்தில் விற்றமின் C 47.8mg ஆக உள்ளது. விற்றமின் C ஆனது எலும்புகள், இழையங்கள் மற்றும் பற்கள் உட்பட உடலின் சகல பாகங்களின் வளர்ச்சிக்கும் மற்றும் மென் சவ்வுகளைப் புதுப்பித்தலுக்கும் தேவைப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி செயல் முறையின் செயற்பாட்டிற்கும் விற்றமின் C உதவுகின்றது.

உணவுகளில் காணப்படுகின்ற சில விற்றமின்களும் கனியுப்புக்களும் ( விற்றமின் A, C, E மற்றும் செலனியம்) எதிர் ஒக்சிடன்களாக (Antioxi dants) உணவுச் சட்டத்தில் காணப்படுகின்றது. இது அன்னாசிப் பழத்தில் நிறைவாகவே உள்ளது.

போலேட்டு ( Folates) விற்றமின் B வகையைச் சேர்ந்த அநேகமான உணவுகளில் இயற்கையாக காணப்படுகின்ற ஒன்றாகும். இது 100g அன்னாசியில் 18mg (micro gram) ஆக உள்ளது. இது உடலில் உள்ள புதியகலங்களை, விஷேடமாக குருதிக் கலன்களை உருக்குவதற்கு உதவுகின்றது. 100g அன்னாசியில் காணப்படும் சத்துக்களின் அளவுகள்

கலோரி – 50kcal
கொழுப்பு – 0.12g
மாப்பொருள் – 13.52g
புரதம் – 054g
கொலஸ்ரோல் – 0mg
நார்ப்பொருள் – 1.40g
மக்னீசியம் – 12mg
கல்சியம் – 13g
இரும்பு – 0.29mg
விற்றமின் A – 58Iu
விற்றமின் C – 47.8 mg
விற்றமின் E – 0.02mg
விற்றமின் K – 0.07 mg
சோடியம் –1 mg
பொட்டாசியம் – 109mg
போலெட்டு (Folates) – 18mg ( micro gram)
பொட்டாசியம் – 109 mg

ஆக காணப்படுகின்றது. இது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது. நார்ச்சத்து 1.40g ஆக காணப்படுகின்றது. நார்ச்சத்தானது குடலின் அசைவினை ஒழுங்காக்குவதற்கு உதவுகின்றது. அவ்வாறே மலச்சிக்கல், எரிச்சல் ஏற்படக் கூடிய அரிப்புடனான குடல் அறிகுறிகள் போன்றவற்றையும் தடுக்கின்றது. நார்ச்சத்து உணவுகளின் நச்சுத்தன்மையை மறைமுகமாக அகற்றுவதுடன் கொலஸ்ரோலின் அகத்துறிஞ்சலையும் குறைக்கின்றது.

ஐஸ்கிறீம், பழ சாலட்டு, புடிங், ஜீஸ் போன்ற உணவுத் தயாரிப்புக்களின் சுவையை கூட்டக்கூடிய ஒரு பழம் அன்னாசி. சுவை மட்டும் அல்லாமல் சத்துக்களும் நிறைவாக உள்ள அன்னாசியை உண்டு பயன்பெறுவோம்.

பு.ஷாலினி
BSC.Foods Nutrition and Diet Therapy