நாளொன்றுக்கு 2.5 லீற்றர் கொதித்து ஆறிய நீர் பருகுங்கள் : Dr.T.பேரானந்தராசா

கடினமான தண்ணீர் (Hardwater) பருகுபவர்களுக்கு சிறுநீரகக் கல் (Kidney stone) ஏற்படலாம். இது தொடர்பாக பூரணமான தகவல்கள் இதுவரையில் இல்லை. ஆனால் கொதித்து ஆறிய தண்ணீரை பருகினால் பிரச்சினை இல்லை. நாளாந்தம் ஒருவர் 1.5 லீற்றர் முதல் 2.5 லீற்றர் வரையிலான கொதித்தாறிய தண்ணீரை பருகி வந்தால் அவருக்கு சிறுநீரகக்கல் உருவாகவாய்ப்பே இல்லை.

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீர் கழிப்பதில் உள்ள சிரமம் காரணமாக தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுகிறார்கள். இதனால் சிறுநீர் செறிவாக்கப்பட்ட (Concentrate) அதன் காரணமாக சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் எவருக்காவது சிறுநீரகக்கல் வந்தால் ஏனைய அங்கத்தவர்கள் அது குறித்து கவனம் செலுத்துவது அவசியம். சில சிறுநீரகப் பிரச்சினைகள் பரம்பரையாக ஏற்படுகின்றன. உதாரணமாக Poly cystic kidney disease என்ற நோய் நிலை யைக்கூறலாம். இப்படியானவர்களின்சிறுநீரகம் பெரிதாக இருக்கும். உட் பகுதி நீர் சேர்த்து சிறுகுமிழ்கள் போல் காணப்படும்.

இது போன்ற சில சிறுநீரகப்பிரச்சினைகள் குடும்பத்தில் எவருக்காவது இருப்பின் ஏனையவர்களுக்கும் இப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று தமது சிறுநீரகத்தை
ஸ்கான் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் 12 மாதங்களுக்கு ஒரு தடவை சிறுநீரகத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

Dr.T.பேரானந்தராசா

பொது வைத்திய நிபுணர்.