மதுப்பழக்கத்திலிருந்து விடுதலைபெற நினைப்பவர்களுக்கு… : Dr.சா.சிவயோகன்

மது அடிமை நிலைமையிலிருந்து விடுபட்ட ஒருவர் அவர் பல விடயங்களில் மிகுந்த அவதானமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக அவர் வேலை செய்யும் இடங்களில் குடிக்கின்ற நண்பர்கள் அதிகமாக இருந்தால் அவர் அவ்வாறான வேலை செய்யும் இடங்களைத் தவிர்த்துக்கொண்டு தனது வேலைக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் அவசியமானது.

அதுபோல் அவர் பார்க்கின்ற வேலை காரணமாகவோ, பழக்கதோசம் காரணமாக அவர் வேலையின் பொழுது மீண்டும் குடிக்க கூடிய சாத்தியங்கள் ஏற்படலாம்.

எனவே குடியிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஒருவர் எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும். அவதானமாக இருக்கவேண்டும்.

சம்பளம் எடுக்கும் நாட்களில் மதுவைநோக்கிய இழுவிசைகளும் தள்ளுவிசைகளும் மிக அதிகமாகும் சாத்தியங்கள்
காணப்படும். அதுபற்றிய உள்ளுணர்வோடு இருந்தால் எவ்வாறான ஆபத்தான சந்தர்ப்பங்களில் இருந்துதப்பித்துக் கொள்ளலாம்.

குடும்பங்களில் நடப்பதுபோல் வேலைசெய்யும் இடங்களிலும் சிலர் பழையகுடிக்கின்ற நிலையில் இருந்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் குத்திக்காட்டிக் கதைக்கலாம். இவ்வேளைகளில் எல்லாம் உணர்ச்சி வசப்படாது அமைதியாக இருந்து அதனை எதிர்கொள்ளப் பழகவேண்டும்.

நான் இப்பொழுதுமாறி விட்டேன் என்றுமனதினுள் அடிக்கடி சொல்லிக் கொள்ளலாம். சிந்தனை ஓட்டம் தெளிவாக இருக்குமாயின் மதுப்பழக்கத்திலிருந்து நிரந்தர மாகவிடுதலை பெறமுடியும்.

Dr.சா.சிவயோகன்
(உளநலமருத்துவநிபுணர்)