சிறுநீரகங்கள் முக்கியமாக ஆறு தொழில்களைச் செய்கின்றன : Dr.T.பேரானந்தராசா

  1. நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உருவாகின்ற யூரியா கிரியாற்றினின் மற்றும் நைதரசன் கலந்தகழிவுப் பொருட்களை சிறுநீரக வெளியேற்றுதல் சாதாரணமாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.5 லீற்றர் முதல் 2 லீற்றர் வரையான சிறுநீரைக் கழிக்கின்றார்.
  2. உடலில் நீரின் அளவையும் மற்றும் பொட்டாசியம், சோடியம், கல்சியம் போன்ற தாதுப்பொருட்களின் (Minerals) அளவையும் சமநிலையில் பேணுதல்.
  3. உடலில் கார, அமிலத்தன்மையை (Acid- Base Balance) பேணுதல் சாதாரணமாக குருதியின் PH – 7.4 ஆகும். இந்த PH இனை பேணுவதில் சிறுநீரகம் சுவாசப்பை மற்றும் உடலில் உள்ள பிற அம்சங்கள் என்பன சம்பந்தப் படுகின்றன. PH – 7.2 இலும் குறைவடைந்தால் உயிராபத்து ஏற்படலாம்.
  4. உடலில் குருதி அமுக்கத்தை  (Blood Pressure) சீரான அளவில் பேணுதல் இதயம் சுருங்கும் போது குருதிக்குழாய்களில் உள்ள அமுக்கத்தை  (Systolic Pressure) 120- 140 mm Hgக்குள்ளும் இதயம் தளர் வடையும் போது குருதிக்குழாய்களில் உள்ள அழுத்தத்தை (Diastolic Pressure) 70-90mm Hg இடையிலும் பேணுதல். இவ்விடயத்தில் சிறுநீரகத்தால் சுரக்கப்படும் (Renin) என்ற சுரப்பு (Hormone) முக்கிய பங்கை வகிக்கின்றது.
  5. உடலில் உள்ள கல்சியத்தின் சம நிலையை பேணுவதில் சிறுநீரகங்கள் முக்கியபங்கை வகிக்கின்றன. எமது உடலில் ஒருகிலோ கிராம் கல்சியம் வரை உள்ளது. அதில் 95 வீதமானவை எலும்புகளிலும் மிகுதியானவை குருதியிலும் மற்றும் சில கலங்களிலும் உள்ளது. எமது உடலில் அகத்துறிஞ்சப்படும் கல்சியம் தொழிற்பாட்டுக்குரிய நிலையை அடைய வேண்டும். இதற்குரிய நொதியங்களை (Hydrolase) சிறுநீரகம் சுரக்கின்றது.
  6. செங்குருதிக்கலங்களில் (Red Blood Corpuscle ) உள்ள ‘ஹீமோகுளோபினின் (Hemoglobin) உருவாக்கத்திற்கு தேவையான எரித்திரோ பொயிற்றின் ஒட்சிசனை காவுவதில் பங்காற்றுகின்றன. ஒருவருக்கு Hemoglobin இன் அளவு குறைவடைந்தால் அடிக்கடி களைப்பு,சோர்வு போன்றபிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Dr.T.பேரானந்தராசா
பொதுவைத்தியநிபுணர்.