காசநோயினை வென்றெடுக்க …. : திருமதி.குயிலினிசுரேஸ்

 • காசநோய் ஒருவகை தொற்று நோயாகும். இது Mycobacterium Tuberiulosis (மைகோபக்றீரியம் ரியூபகுலோசியஸ்) எனும் ஒரு வகை பக்றீரியாகிருமியால் ஏற்படுகின்றது. இதன் தாக்கத்திற்கு உலகசனத்தொகையின் 1/3 பங்கினர் ஆளாகியுள்ளனர். இதிலும் பெரும்பான்மையானோர் ஆசியாக்கண் டத்தைசேர்ந்தவராவர். இலங்கையை பொறுத்தவரை ஏறத்தாழ 9000 காசநோயாளர்கள் வருடந்தோறும் சிகிச்சை பெறுகின்றனர்.
 • காசநோய்த்தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது அல்லதுகதைக்கும் போது அல்லது எச்சில் , சளிபோன்றனதுப்பும் போது அவரிலிருந்து வெளியேறும் காசநோய்க்கிருமியானது அவர்சுற்றாடலிலுள்ளகாற்றினை அடைகின்றது. இவ்வாறு காற்றில் பரவலடைந்துள்ள கிருமிகள் உள்ளகாற்றினை சுவாசிக்கையில் மற்றவர்களுக்கும் பரவ ஏதுவாக அமையலாம்.
 • காசநோயானது சுவா சப்பை, நுரையீரல்,சுற்றுச்சவ்வு,மூளை, சிறுநீரகம் போன்ற பல உறுப்புக்களில் வரினும் சுவாசப்பை காசநோயே தொற்றும் தன்மை வாய்ந்தது.
 • சுவாசப்பை காசநோய் தொற்றுக்குள்ளான ஒருவரின் குணங்குறிகள்.
  • தொடர்ச்சியாக 3 வாரங்களுக்குமேலான இருமல், சளியுடன் இரத்தம் வெளியேறல், இரவுநேரக் காய்ச்சல்.
  • இரவுநேரத்தில் வியர்த்தல்.
  • பசியின்மை.
  • சடுதியான உடல் எடை இழப்பு.
  • நிணநீர்க்கணுவீக்கம் அதாவது நெறி போடல்.

மேற்கூறிய குணங்குறிகளுடன் இருப்போர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று ஆலோசனைபெறல் வேண்டும்.

 • காசநோய்க்கான சிகிச்சையானது இலங்கையின் அரச வைத்தியசாலைகளிலும் மார்புச் சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

காசநோய்த் தாக்கத்திற்கு ஆளாகக்கூடியவர்கள்.

 • காசநோயாளருடன் நெருங்கிப் பழகுவோர்.
 • போசாக்கு குறைபாடு உடையவர் மற்றும் உடல் திணிவுச்சுட்டெண் ((BMI) 18ஐ விடக் குறைந்தோர்.
 • சனநெருக்கடியான இடங்களில் வாழ்பவர்.
  உதாரணம் – சிறைச்சாலையில் வசிப்போர்.
 • காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் குறைந்த இடத்தில் வசிப்பவர்கள்.
 • புகைப்பிடிக்கும் பழக்க முடையவர்கள்.
 • மதுபானம், போதைப்பொருள் பாவனையாளர்கள்.
 •  நீரிழிவு, புற்றுநோய், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர்.
 • ஸ்ரீரொயிட் (Steroid) மருந்துவகைபாவிப்போர்.

சுவாசப்பைகாசநோய் ஒருவரிற்குஏற்பட்டிருப்பதை

 1. சளிப்பரிசோதனை (Sputum for AFB Sputum Culture), தோற்சோதனை (Mantoux Test),நெஞ்சுக்கதிர்ப் படம் (Chest x-ary), இரத்தச்சோதனை. வாயிலாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

 

 • ஆரம்பத்திலேயே சுவாசப்பை காசநோய் கண்டறியப்பட்டவர்களிற்கு சிகிச்சை ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டுவாரங்களில் இன்னொருவரிற்கு தொற்று ஏற்படாத நிலை ஏற்படுவதுடன் நோய்க்கான குணங்குறி கள் தென்படாது. இருப்பினும் சிகிச்சைக் காலம் பூரணமடையும் வரை (6 மாத காலம்) கிரமமான முறையில் காசநோய் மாத்திரைகளை உள்ளெடுப்பதன் வாயிலாக காச நோயைமுற்று முழுதாக குணப்படுத்தமுடியும்.
 •  காசநோய்த்தாக்கத்திற்கு உள்ளான கர்ப்பவதிகளும், பாலூட்டும் தாய்மார்களும் காசநோய் சிகிச்சைக்கு விதிவிலக்கல்ல. அவர்களும் சிகிச்சைக்காலம் பூரணமடையும் வரைகிரமமாக மாத்திரைகள் உள்ளெடுக்க வேண்டும்.
 •  பாலூட்டும் தாய்மார் காசநோய்க்கான சிகிச்சையிலிருப்பினும் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டமுடியும்.
 •  காசநோய் குணமடை தலில் தொடர்ச்சியாக மாத்திரை உள்ளெடுத்தல் மட்டுமல்லாது சத்தான உணவு உள்ளெடுத்தலும் முக்கியபங்குவகிக்கின்றது.அவ்வகையில்.
 • புரதச்சத்து மிக்க உணவுவகைகளான மீன், இறைச்சி, பால், முட்டை, ஈரல் பருப்புவகைகள் போன்றவற்றை தினமும் உண்ணும் உணவுடன் சேர்த்துக் கொள்ளல்.
 • மரக்கறி உண்பவர்கள் எனின் பருப்புவகைகள், சோயாபோன்ற தானிய வகைகளை தினமும் உள்ளெடுக்கவேண்டும்.
 • பச்சை இலை மரக்கறிவகைகள், காய்கறி, பழவகைகளைதினமும் உண்ணும் உணவுடன் சேர்த்துக் கொள்ளல்.
 • போதியளவு நீராகாரம் உள்ளெடுத்தல். நாள் ஒன்றிற்கு 2-3 லீற்றர் நீர் உள்ளெடுக்க வேண்டும். வைத்தியஆலோசனையுடன் தொடர்ச்சியாக சிகிச்சைக்காலம் முடிவடையும் வரைமாத்திரைகள் உள்ளெடுக்கவேண்டும்.
 • காசநோய் சிகிச்சையிலிருக்கும் ஒருவர் பொதுவாக சிகிச்சை ஆரம்பித்து இரண்டு மாதகாலத்தில் அவர்களின் உடல் நிலையானது பழைய நிலைக்குத்திரும்பிவிடுவதால் பலர் இரண்டு மாதங்களின் பின் சிகிச்சையை இடை நிறுத்திவிடுகின்றனர். இவ்வாறு சிகிச்சை பூரணமடையாதவர்களுக்கு மீண்டும் காசநோய் தீவிரமடைந்து உயிராபத்தை விளைவிப்பதுடன் சமூகத்தில் உள்ளமற்றவர்களைத் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.
 • காசநோய் ஏற்பட்டவரிலிருந்து கிருமித்தொற்று மற்றவர்களிற்கு ஏற்படாமல் இருக்க பின்வரும் அறிவுரைகளை கடைப்பிடித்தல் நன்மைபயக்கும்.
 • கிருமித்தொற்றுக் குள்ளானவரைத் தனிமைப்படுத்தல்,தனிமைப்படுத்துமிடம் காற்றோட்டமான சூரியவெளிச்சம் படக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
 • காசநோயாளி இருமும் தும்மும் வேளைகளில் கைக்குட்டை  பாவித்துமுகத்தைமறைத்த வண்ணம் இருமுதல் தும்முதல்.
 • நோயாளியும், நோயாளியைப் பராமரிப்பவரும் அடிக்கடி பாதுகாப்பாக சவர்க்காரமிட்டுகைகளை ஓடும் நீரில் நன்றாகக்கழுவுதல் வேண்டும்.
 • கண்டகண்ட இடங்களில் காசநோயாளி துப்புதலைத் தவிர்த்தல்.
 • மூடியுள்ளபிளாஸ்ரிக் பாத்திரத்தில் சளிமற்றும் துப்பலைச்சேகரித்து எரித்தல்.
 • கிரமமாகமருந்தினை தினமும் சிகிச்சைக்காலம் பூரணமடையும் வரைஎடுத்தல்.
 • ஒழுங்காக மார்புச்சிகிச்சை நிலைய தரிசிப்பிற்கு செல்லல்.
 • நோயாளியின் படுக்கை விரிப்புக்கள், ஆடைகள், கைக்குட்டைபோன்ற வற்றை சரியான தொற்று நீக்கி சவர்க்காரத்தினால் தோய்த்துநேரடி சூரியவெயிலில் உலரவிடப்படல் வேண்டும்.
 • நோயாளிபாவித்த மெத்தை, தலையணை போன்றன சூரிய  வெயிலில் காயவிடப்படவேண்டும்.
 •  காசநோயாளரைப் பராமரிப் பவர் முகமூடிஅணிந்து (Face Mask) பராமரித்தல் தேவையற்று கைகளை மூக்கு, வாய், கண் போன்ற பகுதிக்கு கொண்டு செல்லலை தவிர்த்தல்.
 • நோயாளியைப் பராமரிப்பவர், நோயாளியுடன் வீட்டிலிருப்பவர்கள், நெருங்கிப்பழகுபவர்கள் சளிப்பரிசோதனை செய்து காச நோய்த் தொற்றுக்குள்ளாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
 • காசநோய்த்தாக்கத்திற்குள்ளானவர் சனநெருக்கடியான இடங்களிற்குச் செல்லக்கூடாது. பாடசாலை மாணவர் எனின் பாடசாலைக்கு அனுப்பக்கூடாது.
 •  குழந்தைபிறந்தவுடன் 24 மணித்தியாலத்திற்க்குள் போடப்படும் BCG Vaccine ஆனது குழந்தைகளுக்கு 5 வயதுவரை (Milliary TB, TBMeningitis) மிலியறிரிபி, ரிபிமெனிஞ்சைரிஸ் வராமல் பாதுகாக்கும்.
  எனவே ஒவ்வொருவரும் தனது குழந்தைகளிற்கு இடது கையின் மேற்பக்கத்தில் இத்தடுப்பூசி போடப்படலை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தழும்புசிலவாரங்களில் பின் தென்படலையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். தழும்பு ஏற்படாவிடின் உங்கள் அருகாமையிலுள்ள குடும்ப நல
  உத்தியோகத்தரை அணுகி ஆலோசனைபெறல் அவசியம்.
 • காசநோயாளர்கள் ஒழுங்கானசிகிச்சைமுறையினை முழுமையாக பெற்றுக் கொள்வதனூடகவும், உங்கள் சமூகத்தில் காசநோய்க்கான குணங்குறிகளுடன்  காணப்படுவோரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்தசிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகைகள் மேற்கொள்வதனூடாகவும், நோய்வாய்ப்பட்டவரிலிருந்து ஏனையோ ருக்கு தொற்றுதலை தடுக்க சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் வாயிலாகவும் நமதுசமூகத்தில் காச நோய் எனும் அரக்கனை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஒன்றுபட்டுசெயற்படுவோம்.

திருமதி.குயிலினிசுரேஸ்
தாதிய உத்தியோகத்தர்
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.