அறிகுறிகள் ஏதும் இல்லாத இளம் வயதினருக்கு மருத்துவப் பரிசோதனை அவசியமா?

35 வயது கடந்த அனைவரும் குறைந்தபட்சம் தமது குருதி அமுக்கத்தையும் குருதிகுளுக் கோஸின் அளவையும் தமது உடல் நிறை சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.

காரணம் உயர்குருதி அமுக்கம், நீரிழிவு போன்ற நோய்கள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நீண்ட காலம் உடலிலே இருந்து உடல் உறுப்புகளில் பல நிரந்தரமான பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும். எனவே அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருப்பது புத்தி சாதுரியம் ஆகாது.

