ஒருவர் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது போதுமானது? : Dr.சி.சிவன்சுதன்

பொதுவாக ஆரோக்கியமான வளர்ந்தவர்கள் ஒருவாரத்திற்கு 2 1⁄2 மணிநேரமாவது உடற்பயிற்சிசெய்வது நல்லது.
இதை வாரத்திற்கு 3 தொடக் கம் 5 நாட்களுக்கு பிரித்து செய்து கொள்வது விரும்பத்தக்கது.

நடத்தல், சைக்கிள் ஓடுதல், நீந்துதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் போன்ற பயிற்சிகள் போதுமானவை. ஓடுவது போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதாயின் வாரத்திற்கு 1 1⁄4 மணி நேரமாவது செய்வது போதுமானது.

சிறுவர்கள் தினமும் 1 மணி நேரமாவது ஓடி விளையாடுதல் போன்ற உடற் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும்.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்.