பெறுமதியற்ற உணவு (Junk Food)

குறைவான போஷாக்கு பெறுமதி கொண்ட உணவுகளை பெறுமதியற்ற உணவு என வரையறுக்கக் கூடிய முறையற்ற சொல்லாகும்.

இவ்வுணவுகளில் அதிக அளவிலான சீனி மற்றும் கொழுப்புகள் உள்ளடக்கப்பட்டிருப்பதினால் இவை அதிக கலோரியைக் கொண்டுள்ளதுடன் குறைவான நுண்ணூட்டச் சத்துக்களைக்கொண்டி ருக்கின்றது.

உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்பான ஈற்றுணவுகள், இனிப்புக்கள், உருளைக்கிழங்கினது மாப்பொருளின் தயாரிப்புகள் மற்றும் காபனேற்றப்பட்ட மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்கள் போன்ற சிற்றுண்டிகள் இலங்கையில் உட்கொள்ளப்படும் முக்கிய பெறுமதியற்ற உணவுகளாகும்.

‘வெற்றுக்கலோரி’ (அதிககலோரிகள் ஆனால் குறைந்த நுண்ணூட்டச் சத்துக்கள்) எனும் பதமும் இதனையேவிபரிக்கின்றது.

இவை புரதம், கனியுப்புக்கள், மற்றும் விற்றமின்கள் போன்றவற்றை வழங்குவதில்லை. பெறுமதியற்ற உணவுகள், அவற்றின் அதிகசுவை காரணமாக பிரபல்யமாகியுள்ளன.

ஆனால் அவற்றின் சுவையானது வீண் செலவுகளான எண்ணெய், உப்பு மற்றும் சீனி போன்றவற்றின் பாவனை மூலம் தான் ஏற்படுகின்றது என்று அறிந்திருத்தல் வேண்டும். பெறுமதியற்ற உணவுகளை உண்ணுவதற்கு ஊக்கமளிக்கக் கூடாது. பெறுமதியற்ற உணவுகளை அதிகளவில் உண்பதால், நீரிழிவு நோய்வகை 2, அதீத உடல் நிறை, இருதய நோய்கள் மற்றும் பல் சிதைவு போன்ற நோய்கள் ஏற்படகாரணமாகும்.

ஒவ்வொரு உணவுகளையும் அவ்வுணவின் பொதியிலுள்ள சுட்டுத்துண்டின் அடிப்படையில் தீர்மானிக்கவேண்டும்.

இத்துண்டில் சேர்மானப் பொருட்களின் பட்டியல் இறங்கு வரிசையில் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

சீனி, கொழுப்பு, அல்லது உப்பு போன்றன (அதிகளவிலான செறிவில் இருந்தால்) சேர்மானப் பொருட்களில் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவ்வகையான உணவுகளை தவிர்த்தல் நல்லது. ஒரு முழு உணவாக காணப்பட்டாலொழிய ஒரு உணவு பரிமாறலின் போது 300 கிலோ கலோரிக்கு மேலான சக்தி வழங்கப்படுமானால் அவற்றை தவிர்க்கவும்.

5 கிராம் கொழுப்பு ஆனது ஒரு தேக்கரண்டிகொழுப்பிற்கு அல்லது எண்ணெய்க்கு சமனானதாகும்.