தக்காளி சாதம்

சமையல் போட்டியில் பங்குபற்றிய ஆரோக்கியமான புதிய உணவு

தேவையான பொருட்கள்

அரிசி – ¼Kg
தக்காளி – ¼Kg
இஞ்சி – 10g
வெள்ளைப்பூண்டு – 10 பல்
ஏலக்காய் – 5
ப.பட்டாணி -50g
வெ.கடலை 50g
பீனிஸ் – 10
கரட் – 1
சோயாமீட் – 50g
வெங்காயம் – 2
உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
ந.எண்ணெய் – 25 ml
கடுகு, சி.சீரகம், சோம்பு ½ தேக்கரண்டி

செய்முறை

அரிசியை ஊறவைக்க வேண்டும். இடைவெளியில் தக்காளி, வெங்காயத்தை வெட்டவேண்டும். இஞ்சி, வெ.பூண்டைவிழுதாக்கவேண்டும். மரக்கறிகளை வெட்டிவிட்டு, இரவு ஊறவைத்த தானியங்களை வடிகட்டிகொள்ளவேண்டும்.

இப்போது அடுப்பை மூட்டி, குக்கரை சூடேற்றி எண்ணெய் சூடேறியபிறகு, சி. சீரகம் ,சோம்பு, கடுகு மூன்றையும் பொரியவிடவேண்டும். பின்புவெங்காயம், அரைத்தவிழுது, ப.மிளகாய் , ஏலக்காய், கறிவேப்பிலைபோட்டு தாளிக்கவேண்டும். பின்பு மரக்கறிகளை போட்டு ஆவியில் வேகவிடவேண்டும். அரிசியை கழுவி மரக்கறிகலவையுடன் சேர்க்கவேண்டும்.

உப்பு இட்டு தேவையான நீர் சேர்த்து குக்கரை மூட வேண்டும். மூன்றுவிசில் விட்ட பிறகுஅடுப்பை அணைத்து குக்கரை இறக்கவேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து சுவையான சாதத்தை கிளறிவிட்டு பரிமாறவும்.

இவ்வுணவை அறிமுகம் செய்தவர்: தனலக்ஷ்மி பழனியாண்டி