குருதிக்கொடைசெய்யவிரும்புவோர்….

குருதிவகைகள் தொடர்பான கருத்தியலை வரலாற்றில் முதன்முதலில் பதிவு செய்த விஞ்ஞானி கார்ல் லான்ஸ்ரைனர் ஆவார். உலக சுகாதார நிறுவனம் இவருடைய பிறந்ததினத்தை அதாவது ஆனிமாதம் பதினான்காம் திகதியை உலக குருதிக்கொடையாளர் தினமாக அறிவித்துள்ளதுடன் வருடம்தோறும் அத்தினத்தை உலக குருதிக் கொடையாளர் தினமாகக் கடைப்பிடித்தும் வருகின்றது.

அந்த வகையிலே நடப்பாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் குருதிக்கொடை சார்விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் பொருட்டும் “குருதித்தானம் இன்றும் என்றும்” என்னும் தொனிப்பொருளின் கீழாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலே குருதிக் கொடை பற்றி சிந்தித்தல் சாலப் பொருத்தமானதாகும். குருதி மாற்றீடு என்பது பல்வேறு நோய் நிலைகளிலிருந்து ஓர் நோயாளியைப் பாதுகாப்பதற்கான சிகிச்சை முறையாகக் காணப்படுகின்றது. வீதி விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சையின் போது குருதியிழப்பு ஏற்பட்டவர்கள் தீவிர குருதிச் சோகைக்கு உள்ளாகின்றனர். அதன்போது குருதியின்தேவைப்பாடுஅவசியமாகிறது. தவிர மகப்பேற்றின் போதான குருதியிழப்பு டெங்குக் குருதிப் பெருக்குக்கு எனப் பலவிதமான நோய் நிலைகளின் போதான சிகிச்சைகளுக்கும் இவை ஆதாரமாக அமைந்துள்ளன.குருதியும், குருதி உற்பத்திகளும் உயிர்காக்கும் மூலங்களாகவே உள்ளன. எனவே சிறந்ததொரு குருதிக் கொடையாளர் குழாமை எமது பிராந்திய குருதி வங்கி கொண்டிருத்தல் என்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

குருதிக் கொடை வழங்குதல்

குருதிக் கொடை செய்வோரினதும்,குருதி உள்ளிட்டுச் வன்முறைக்கு உட்படுவோரினதும்பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு குருதிக் கொடை வழங்கும் நபர்பூர்த்தி செய்யவேண்டியதான சில நிபந்தனைகள் பின்வருமாறு

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராகவும் அறுபது வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஏற்கனவே குருதிக் கொடை வழங்கியவராயின் இறுதியாக குருதிக்கொடை வழங்கியநாளிலிருந்து நான்குமாதகாலங்களை கடந்திருத்தல் வேண்டும்.
ஈமோக்குளோபின் அளவு (Haemoglobin)12g/dl இலும் அதிகமாக இருத்தல் வேண்டும்
தீவிர நோய் நிலைகள் மற்றும் கர்ப்ப காலம் அல்லாதிருத்தல்
தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தகுதி வாய்ந்த சான்றுப்பத்திரத்தை வைத்திருத்தல்
குருதியால் பரவக்கூடியதான நோய்களை கொண்டிருப்பதற்கான அபாயநிலைஅறிகுறிகளை கொண்டிராது இருத்தல்.

குருதிக் கொடை செயன்முறைகள்

குருதிக்கொடைசெய்யவிரும்புவோர் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு குருதிக் கொடை தொடர்பிலான அறிவுட்டல் செயற்பாடுகளுக்கு உள்ளாக வேண்டும் இதன் போது குருதிக் கொடை செய்யும் பொறிமுறை மற்றும் குருதி வழங்கலுக்கு முன்னதான வினாக்கொத்துக்களை முழுமைப்படுத்தல் வேண்டும்.

அதனைத் தொடர்ந்து குருதிக் கொடையாளி குருதி வழங்கல் செயன்முறைக்குத் தகுதியானவரா என்பது உறுதிசெய்யப்படும்.

தகுதி வாய்ந்தவர் எனில் அவர் குருதி வழங்கல்செயன்முறைக்கு உட்படுத்தப்படுவர்.

குருதி வழங்க விருப்புடையவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உண்டாகலாம். குறிப்பாக எவ்வளவு குருதி அவர்களது உடலில் இருந்து எடுக்கப்படும் என்ற கேள்விகள் எழலாம. உண்மையில் 450 மில்லிலிற்றர் (ml) அளவுடைய குருதியே உடலில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றது.

இது உடலில் உள்ள மொத்தக் குருதிக் கனவளவின் 10 வீதமானதாக காணப்படும். அத்துடன் இழக்கப்பட்ட குருதியானது 24 மணித்தியாலங்களினுள் உடலில் மீண்டும்பிரதியீடு செய்யப்பட்டு விடுகின்றன. எனவே குருதியிழப்பினால் பாதிப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது.

ஆக ஒருவர் வழங்கும் குருதியானது மூன்று உயிர்களைக்காக்கக் பயன்படுகின்றது. இலங்கையில் உளள பெரும்பாலான குருதிக் கொடையாளர்கள் தன்னார்வத் தொண்டர்களாகவே காணப்படுகின்றனர். இவ்வகையான குருதி வழங்குநர்களின் குருதி ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும்
கருதப்படுகின்றது.
குருதிக் கொடை செய்வோம்.உயிர்களைக்காப்போம்.