காளான் வடை

சமையல் போட்டியில் பங்குபற்றிய ஆரோக்கியமான புதிய உணவு

தேவையான பொருட்கள்

காளான் – 100g
கொண்டல் கடலை – 200g
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1
உள்ளி – 6 பல்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மிளகாய் பொடி -1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் கடலை ஊறவைப்பதற்கு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

கொண்டல் கடலையை 8 மணிநேரம் ஊறவைக்க. பின் அரைக்க. (அரைக்கும் போது நீர் சேர்க்க வேண்டாம்.) அரைக்கும் போது 1 மேசைக்கரண்டி கடலையை அரைக்காமல் எடுத்துவைக்க. பின்பு அரைத்த கடலையுடன் பொடியாக்கிய காளான், பச்சை மிளகாய், வெங்காயம், உள்ளி மற்றும் துருவிய இஞ்சி,பொடியாக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு என்பவற்றுடன் எடுத்துவைத்த ஒரு மேசைக்கரண்டி கொண்டைக் கடலையையும் கலந்து, நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி மெதுவாக உள்ளங்கைகளில் வைத்து அமர்த்தி, பின்பு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

இவ்வுணவை அறிமுகம் செய்தவர்: S.ஹரிஹரசுதா.